விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷியாம், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி வசூலை ஈட்டி வருகிறது. இவ்வாறு வாரிசு பட பிசினஸ் ஒருபுறம் சூடுபிடித்து வரும் வேளையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் விட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது படக்குழு. அதன்படி தீபாவளிக்கு இப்படத்தின் போஸ்டர், சர்ப்ரைஸாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் ஸ்டில்ஸ்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த ஸ்டில்ஸ்களை பார்த்து ரசிகர்கள் கேட்பதெல்லாம் ஒரே கேள்வி தான், விஜய்க்கு வயசு ஆகுமா? ஆகாதா? என்பது தான். 48 வயதிலும் செம்ம யங்காக காட்சியளிக்கும் விஜய்யின் புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.