விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ ரிலீசுக்கு ரெடி... போஸ்டருடன் வந்த அப்டேட்

Published : Oct 26, 2022, 10:54 AM IST

விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கி உள்ள கனெக்ட் படத்தின் போஸ்டருடன் கூடிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
12
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ ரிலீசுக்கு ரெடி... போஸ்டருடன் வந்த அப்டேட்

நடிகை நயன்தாரா, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த படங்கள் ஆண்டுக்கு ஒன்றாவது ரிலீசாகி விடுகின்றன. சமீபத்தில் கூட ஓ2 எனும் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது நயன்தாரா நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனெக்ட் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்...ரெட் ஜெயன்டுக்கு விஜய் நோ சொன்னதால்... அஜித்தின் துணிவு படத்தை தட்டித்தூக்கிய உதயநிதி - அப்போ வாரிசு யாருக்கு?

22

கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கியவர் ஆவார். கனெக்ட் படத்தையும் அவர் அதேபாணியில் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், கனெக்ட் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளியையொட்டி இப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் வினய், நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதன்மூலம் இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் அது திரையரங்கிலா அல்லது ஓடிடியிலா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய்-லாம் இல்லைங்க... தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..!

Read more Photos on
click me!

Recommended Stories