அப்போ தளபதி 68 ஹீரோயின் அவங்கதானா..? 20 ஆண்டுகள் கழித்து இணையும் ஜோடி? - மீண்டும் முணுமுணுக்கும் கோலிவுட்!

Ansgar R |  
Published : Aug 11, 2023, 08:16 PM ISTUpdated : Aug 11, 2023, 08:41 PM IST

தளபதி விஜய் தனது லியோ திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த நிலையில் தற்பொழுது தனது அடுத்த பட பணிகளை துவங்குவதற்கு முன்பாக ஓய்வெடுக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

PREV
13
அப்போ தளபதி 68 ஹீரோயின் அவங்கதானா..? 20 ஆண்டுகள் கழித்து இணையும் ஜோடி? - மீண்டும் முணுமுணுக்கும் கோலிவுட்!

இந்நிலையில் ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க பிரபல நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில நாட்களுக்கு பின்பு அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுப்பதை வைத்து பார்த்தால் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தளபதி விஜய் அவர்களுடன் நடிகை ஜோதிகா தளபதி 68 திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Breaking: நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

23

தளபதி விஜய் மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து நடித்த குஷி மற்றும் திருமலை திரைப்படம் இரண்டுமே பெரிய அளவில் வெற்றி கண்டது. இவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாக திகழ்ந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு திருமலை திரைப்படம் வெளியானதற்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளாக தளபதி விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
 

33

இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதியின் 68வது திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் மீண்டும் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகியாக ஜோதிகாவை பீட் செய்தாரா கங்கனா? வெளியானது 'ஸ்வகத்தாஞ்சலி' முதல் சிங்கிள் லிரிக்கல் பாடல்!

click me!

Recommended Stories