பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமாகி ரித்திக் ரோஷன், அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா, தெலுங்கு திரைப்படம் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். பார்பதற்க்கே பப்லியாக, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவர் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.
குறிப்பாக விஜய், சிம்பு, ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட ஹன்சிகா, சிம்புவின் காதல் வலையிலும் சிக்கினார். இவர்களின் காதல் திருமணம் வரை சென்ற நிலையில், ஒரு சில பிரச்சனையின் காரணமாக இவர்கள் காதல் ஆரம்பமான வேகத்திலேயே முடிவுக்கு வந்தது.
பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், உஷாராக தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தற்போது தமிழில் 5 படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.