இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் வருடம் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' மூலம் தமிழ் திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கிய ராதிகா, இடைவிடாமல் 45 வருடங்களாக அதே உச்சாகத்துடனும், முதிர்ச்சியான அனுபவங்களுடனும் தற்போது வரை பயணித்து கொண்டுள்ளார். பிரபல நடிகர் MR ராதாவின் மகள் என்கிற, அடையாளத்தோடு, வாரிசு நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், சில வருடங்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் அண்ணாமலை, வாணி ராணி, சித்தி, சித்தி 2 போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களிலும் நடித்துள்ளார். அதே போல் தன்னுடைய ராடான் நிறுவனத்தின் மூலம் பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்துள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட்டாக முதல் மரியாதை, விக்ரம், செந்தூர பூவே, இணைந்த கைகள், கருத்தம்மா போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
திரையுலகிலும், நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்றம் இறக்கங்களையும்... விமர்சனங்களையும் எதிர்கொண்ட ராதிகா, நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ராதிகாவுக்கு ஒரு மகள் இருந்த நிலையில், சரத்குமார் மூலம் ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். தற்போது வெளிநாட்டில் தன்னுடைய மேற்படிப்பை படித்து வருகிறார் ராகுல். எப்படி பட்ட சூழ்நிலையிலும் இடைவிடாத, தன்னுடைய கலை பணிகளை தொடர்ந்து வரும் ராதிகா, திரையுலகில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இந்த சந்தோஷமான தருணத்தை கணவர் சரத்குமாருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
கையில் மது கோப்பையுடன்... கணவருடன் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!