தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகரும், நடிகருமான தாடி பாலாஜி, கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நேரில் கள ஆய்வு செய்திருக்கிறார்.
Thaadi Balaji Inspection in TVK Karur Stampede Place
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரப்புரையின் போது விஜய்யை காண அதிகப்படியான மக்கள் கூடியதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மூச்சு திணறி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு நேரடி விசிட் அடித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். நடிகர் விஜய் மட்டும் இதுவரை கரூர் செல்லவில்லை. அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
24
தாடி பாலாஜி கரூரில் கள ஆய்வு
விஜய் வரவில்லை என்றால் என்ன, என்னுடைய தலைவனுக்காக நான் வருவேன் என்று தவெக சார்பில் முதல் ஆளாக கரூர் சென்று அங்கு அதிரடியாக கள ஆய்வு நடத்தியது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறி இருக்கிறார் தவெக பிரமுகரும், நடிகருமான தாடி பாலாஜி. திமுகவுக்கு எப்படி செந்தில் பாலாஜியோ.. அதே போல் தவெக-வுக்கு தாடி பாலாஜி இருக்கிறார் என்று தவெக-வின் விர்சுவல் வாரியர்ஸ் கூறி வருகின்றனர்.
34
தலைவருக்கு எல்லா விஷயமும் தெரியாது
கரூரில் தவெக பரப்புரை நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, தலைவருக்கு எல்லா விஷயமும் தெரியாது. அவரே புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கிறார். இந்த சம்பவம் கூட அவருக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கும் என நான் கருதுகிறேன். தலைவரை விடுங்க, தவெக-வில் இரண்டாம் கட்டமாக இருப்பவர்கள் ஏன் இவ்வளவு அஜாக்கரதையாக இருக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி. அவர்கள் எல்லோருமே இந்த இடத்தை பார்த்திருக்கிறார்கள். இந்த இடத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த நேரத்தில் வர வேண்டும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் தளபதியிடம் சொல்லியிருக்க வேண்டும் என தாடி பாலாஜி கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ஷூட்டிங் நடைபெறும் போதே 7 மணிக்கு கால்ஷீட் என்றால் 6.30க்கெல்லாம் ஸ்பாட்டில் இருப்பவர் தான் விஜய். இதில் விஜய் சார் மீது நான் தப்பு சொல்லவே மாட்டேன். இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏன் இதை அவரிடம் சொல்லவில்லை. விஜய் சார் இரண்டாம் கட்ட தலைவர்களை நம்பி வருகிறார். மக்கள் விஜய் சாரை நம்பி வர்றாங்க. அதுதான் உண்மை. ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார் ஆகியோரெல்லாம் அரசியல் நன்கு அறிந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு தலைவரை வழிநடத்துவதில் ஏன் தவறுகிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி என தாடி பாலாஜி பேசி இருக்கிறார்.