பைக்கை அபேஸ் பண்ணிய கும்பல்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

Published : Oct 04, 2025, 11:01 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மாவின் கடை விவகாரம் தொடர்பாக கோவிலுக்கு வருபவர்களிடம் மீனா கருத்து கேட்டு வந்த நிலையில், அவரின் பைக் காணாமல் போய் இருக்கிறது.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா சந்திரா, கோவிலின் அருகே அழுகிய பழம், பூ, தேங்காய் போன்றவற்றை விற்பனை செய்வதாக கூறி அவரின் கடையை மாநகராட்சி அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனால் தன்னுடைய வாழ்வாதாரமே போனதாக கண்ணீர்விட்டு அழுகிறார் சந்திரா. தன்னுடைய அம்மாவின் கடையை எப்படியாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என களத்தில் இறங்கும் மீனா, கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களிடம், தன்னுடைய அம்மாவின் கடையில் எந்த தரமற்ற பொருட்களும் விற்பக்கப்படுவதில்லை என கருத்து கேட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்குகிறார்.

24
காணாமல் போகும் மீனாவின் பைக்

கோவிலில் கருத்து கேட்ட பின்னர் விட்டு வெளியே வரும் மீனாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மீனாவின் பைக் காணாமல் போகிறது. இதையடுத்து அருகில் இருப்பவர்களிடம் விசாரிக்கிறார். தாங்கள் பார்க்கவில்லை என அனைவரும் சொல்லிவிடுகிறார்கள். அப்போது அந்த பைக்கை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் ஆட்டோவும் அங்கு நிற்கிறது. அதில் உள்ளவர்களிடமும் கேட்கிறார் மீனா. அவர்களும் தாங்கள் எடுக்காதது போல் சொல்லிவிட்டு அங்கிருந்து பைக் உடன் எஸ்கேப் ஆகிறார்கள். இதையடுத்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒருவர், போலீசிடம் புகார் அளிக்க சொல்கிறார்.

34
அருண் போடும் பிளான்

பின்னர் காவல் நிலையம் செல்லும் மீனா, அங்கு அருணை சந்திக்கிறார். அப்போது அவரிடம் தன்னுடைய பைக் தொலைந்து போன விஷயத்தை சொல்கிறார். இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம், வண்டியை கண்டுபிடித்துவிடலாம், அம்மாவுடைய கடையையும் திரும்ப மீட்க நான் எல்லா முயற்சியும் செய்துகொண்டு வருவதாகவும் அருண் கூறுகிறார். பின்னர் அங்கிருந்து மீனா சென்றவுடன், இவங்க குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தாலும், என்கிட்ட தான் வர்றாங்க, நம்ம இதெல்லாம் சரி செய்தால் தான் நமக்கு நல்ல பெயர் வருவதோடு, அவர்கள் முத்துவை மதிப்பதும் குறையும் என மனதுக்குள் நினைக்கிறார் அருண்.

44
அடுத்த கிளை ஓபன் பண்ணும் மனோஜ்

மறுபுறம் மனோஜ், தன்னுடைய கடையின் அடுத்த கிளையை ஓபன் பண்ண இடம் தேடும் விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறார். அப்போது அதற்கு பணம் இருக்கிறதா என கேட்கிறார் அண்ணாமலை. முதல் கடையை திறந்தபோதே உங்களிடம் ஜீவா கொடுத்த பணத்தை எடுத்தாங்க, இப்போ யார்கிட்ட இருந்து எடுக்குறீங்க என முத்து கேட்க, அதற்கு ரோகிணி, நாங்கெல்லாம் பணத்தை எடுக்குற ஆள் கிடையாது. நல்ல விஷயம் சொன்னா, அதைக்கூட குறைதான் சொல்வீங்களா என வாக்குவாதம் செய்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories