சும்மா இருந்த செந்திலை உசுப்பேத்திவிட்ட பாண்டியன் – தரமான சவம்பம் செய்த செந்தில், ஷாக்கான மீனா!

Published : Oct 03, 2025, 11:50 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் வெயிலில் வேலை பார்த்த நிலையில் அதைப் பற்றி பாண்டியன் நக்கல் அடிக்கவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற செந்தில் தனிக்குடித்தனம் செல்வதாக கூறியுள்ளார்.

PREV
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரே குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு வாரம் அரசி தொடர்பான காட்சிகள் அரங்கேறிய நிலையில் மற்றொரு வாரம் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்னொரு ஒரு வாரம் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகளும், மாணிக்கம் தொடர்பான காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

காந்தாரா புயலிலும் அசராம அடிக்கும் பவன் கல்யாணின் ஓஜி; கலெக்‌ஷன் இத்தன கோடியா?

26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு

இப்படி மாறி மாறி ஒருவர் மாற்றி ஒருவரை வைத்து பாண்டியன் சீரியல் பார்ட் 2 ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், மீனாவிற்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்ட நிலையில், செந்தில் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளார். இதில் மீனாவிற்கு துளி கூட உடன்பாடில்லை. இந்த சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட எபிசோடில் பீல்டு ஒர்க் தொடர்பான செந்தில் வெயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

மூதேவி.. கையில விலங்கு போட்டு கூட்டி வரணும்ங்க அவனை..! விஜயை ஒருமையில் பேசும் நக்கீரன் கோபால்!

36
வெயிலில் வேலை

அதனை பாண்டியன் பார்த்த நிலையில், அவரிடம் சென்று நக்கலாக பேசியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற செந்தில் மீனாவிற்கு போன் போட்டு அந்த ஆளு என்னை ரேக்கிங் செய்கிறார். அப்படி இப்படி என்று காட்டமாக பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து அரசு குடியிருப்பு குறித்து செந்தில் வீட்டில் உள்ளவர்களிடம் பேசினார். இதைக் கேட்டு ராஜீ ரொம்பவே வருத்தப்பட்டார். ஆனால், இதில் கதிருக்கு சந்தோஷம் தான். சரி, அண்ணன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

46
அரசு குடியிருப்பு

இந்த நிலையில் தான் அரசு குடியிருப்பு கொடுக்கப்பட்டது குறித்தும், தான் தனிக்குடித்தனம் செல்ல இருப்பது குறித்தும் செந்தில் வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரியப்படுத்தினார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், செந்திலுக்கு கொஞ்சம் கூட எந்தவித வருத்தமும் இல்லை. தனது அம்மா கோமதி எவ்வளவோ கெஞ்சியும் செந்தில் மனசு துளி கூட கரையவில்லை. சரவணன், பழனிவேல் என்று எல்லோருமே சொல்லியும் செந்தில் அதற்கு அசையவில்லை.

56
நாளை பால் காய்ச்ச பிளான்

தனது முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார். இரவு முழுவதும் மீனாவிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்த நிலையில், காலையில் தான் நாளை பால் காய்ச்ச இருப்பதாகவும், அனைவரும் அந்த வீட்டிற்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், இதைப் பற்றி மீனாவிடம் கொஞ்சம் கூட பேசவில்லை. மாறாக , தான் ஜோசியரிடம் சென்று பால் காய்ச்சுவது பற்றி கேட்டதாகவும், அவர் நாளை நல்ல நாள் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

66
இதுதான் என்னுடைய முடிவு

ஆனால், மீனா இதை நம்பவில்லை. அப்படி அவர் யாரிடமும் கேட்கவில்லை. அவராகவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதற்கு பாண்டியன் அவர் நம்மிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதுதான் என்னுடைய முடிவு என்று திட்டவட்டமாக கூறுகிறார். அவரிடம் சென்று கெஞ்சிக் கொண்டிருக்க என்று கோமதியைதிட்டினார். இனிமேல் அவரிடம் யாரும் இதைப் பற்றி எதுவும் பேசக் கூடாது. இது கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் பிரச்சனை. அவர்களாகவே முடிவு செய்து கொள்ளட்டும் என்று பாண்டியன் கூறிவிட்டார். இனி நாளை மட்டுமின்றி அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories