சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா நடத்தும் கடை கோவில் அருகே இருந்து தூக்கப்பட்ட நிலையில், அதை மீட்க முத்து ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா சந்திரா கோவில் அருகே பூக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், அவரின் கடையை தூக்கச் சொல்லி சிந்தாமணியிடம் ரோகிணி சொன்ன நிலையில், அவர் கார்பரேஷன் அதிகாரிகளிடம் புகார் செய்து அந்த கடையை அங்கிருந்து தூக்கச் சொன்னதை அடுத்து, சந்திராவின் கடையை அதிகாரிகள் அகற்றினர். இந்த விஷயம் மீனாவுக்கு தெரிந்ததும், அவர் அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி, அழுத நிலையில், விஜயா தனக்கு பிரியாணி செய்துகொடுக்குமாறு கேட்க, அனைவரும் அவரை திட்டுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பார்க்கலாம்.
24
விஜயா கொடுக்கும் ஐடியா
வீட்டில் பிரியாணி கிடைக்காததால், கடையில் பார்சல் வாங்கி வந்து தன்னுடைய யோகா செண்டருக்கு வரும் விஜயா, அங்கு மீனா அம்மா கடையை தூக்கியதால் தான் சந்தோஷத்தில் இருப்பதாகவும், அதனால் பிரியாணி வாங்கி கொண்டாடுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து அங்கே இருக்கும் சிந்தாமணியிடமும் பிரியாணி கொடுக்கும் விஜயா, நீங்க தான் மீனா அம்மா கடையை தூக்கிருப்பீங்கனு நினைச்சேன் என சொல்ல, அதற்கு அவர் நானெல்லாம் அதை செய்யல என சொல்கிறார். அப்போது புது பிளான் போட்டு கொடுக்கும் விஜயா, மீனாவின் வண்டியை தூக்கிருந்தா நல்லா இருக்கும் என கூறுகிறார்.
34
மீனாவின் வண்டியை தூக்க சொன்ன சிந்தாமணி
இந்த பிளான் நல்லா இருக்கே என யோசிக்கும் சிந்தாமணி, உடனடியாக தன்னுடைய ஆளுக்கு போன் போட்டு, மீனாவின் வண்டியை திருட சொல்கிறார். மறுபுறம் மீனாவின் அம்மா தன்னுடைய கடை போனதால், சாப்பிடாமல் அழுதுகொண்டிருக்கிறார். அவரை மீனா, சமாதானப்படுத்துகிறார். பின்னர் முத்துவும் தன்னுடைய மாமியார் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் அப்செட்டாக இருக்க, அப்போது அங்கு வரும் மீனாவிடம், கார்பரேஷனில் விசாரித்ததாக சொல்கிறார். அதேபோல் மீனாவும், சீதா அருணிடம் சொல்லி விசாரிக்க சொன்னதாக சொல்லி இருக்கின்றார்.
கோவிலுக்கு புதிதாக வந்த மேனேஜர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு தூக்கி இருப்பதாக சொல்கிறார். உடனே பிளான் போடும் முத்து, புதிதாக வந்துள்ள அந்த மேனேஜரிடம் இருந்து தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என சொல்லி செல்வத்திடம் ஒரு பிளானை சொல்கிறார். அதனால் மறுநாள் செல்வம் அந்த மேனேஜரிடம் சென்று தன் தங்கச்சிக்கு கடை போட பர்மிஷன் கேட்கிறார். அதற்கு அவர் 10 ஆயிரம் கொடுத்தா உனக்கு பர்மிஷன் தருகிறேன் என சொல்கிறார். இதன்பின் முத்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.