மறைந்த முதல் கணவர்.. நைட் பார்ட்டியில் போதையில் ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டிய 45 வயது நடிகை - லீக்கான போட்டோ

First Published | Jun 25, 2023, 7:56 AM IST

தெலுங்கு நடிகை சுரேகா வாணி, நைட் பார்ட்டியில் குடிபோதையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

surekha vani

ஆந்திராவை சேர்ந்தவர் சுரேகா வாணி. இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இதன்பின்னர் தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான சுரேகா வாணி அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுரேகா வாணிக்கு அதில் ஏராளமான பாலோவர்களும் உள்ளனர்.

surekha vani

நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த ஜோடிக்கு சுப்ரிதா என்கிற மகளும் உள்ளார். தற்போது மகளுடன் தனியாக வசித்து வரும் சுரேகா வாணி, இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதுகுறித்து சுரேகா வாணி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றார்.

இதையும் படியுங்கள்... அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு.. பிரபல தமிழ் நடிகருடன் விரைவில் டும்.. டும்..டும்! சம்மந்தியாகும் பிரபலங்கள்!


surekha vani

இந்நிலையில், நடிகை சுரேகா வாணி, நைட் பார்ட்டியில் ஆண் நண்பர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த நபருக்கு உதட்டி முத்தம் கொடுத்தபடி இருக்கும் நடிகை சுரேகா வாணியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். திருமணம் வயதில் மகளை வைத்துக்கொண்டு இப்படி செய்யலாமா என சுரேகா வாணிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

surekha vani

நடிகை சுரேகா வாணியுடன் நெருக்கமாக இருக்கும் நபர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரி தானாம். இவர் சுரேகா வாணியை விட 10 வயது குறைந்தவர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதை பொருள் வழக்கில் சிக்கியவர் ஆவார். அவருடன் சுரேகா வாணிக்கும் நெருக்கம் இருப்பதால், அவருக்கு போதை வழக்கில் தொடர்பு இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதி, அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ரஜினி, அஜித், முதல் விஜய் தேவரகொண்டா வரை புகைப்பழக்கத்தை கைவிட்ட பிரபலங்கள்! ஏன்? சுவாரஸ்யமான காரணங்கள்!

Latest Videos

click me!