90-களில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். கன்னட திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்திருந்தாலும், இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர். நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கும் இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன், உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டியுள்ள நிலையில் விரைவில் இருவருக்கும், திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படத்தை தாண்டி, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 4 ஆவது இடத்தை கைப்பற்றினார். மேலும் விரைவில் ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி தம்பிராமையா திருமணம் குறித்து, அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே ரசிகர்கள் பலரும் இப்போதே இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூற துவங்கி விட்டனர்.