போட்ரா வெடிய.. 'வேட்டையன்' பட சிறப்பு காட்சிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தமிழக அரசு!

First Published Oct 9, 2024, 1:32 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக உள்ள வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது, தலைவரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Vettaiyan Movie:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் நடித்துள்ள 170-வது திரைப்படம் 'வேட்டையன்'.  இந்த படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியள்ளார். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு, எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

Vettaiyan Movie Review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுட்டருக்கு எதிரான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள, இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர்... பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக நாளை வெளியாக உள்ளது 'வேட்டையன்' திரைப்படம்.

ரவீந்தருக்கு சிபாரிசு செய்ததே நான் தான்! முத்துக்குமரன் செம்ம கேடி.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

Latest Videos


Rajinikanth And Amitabh Bachchan

இந்த படத்தில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதை போல் மலையாள நடிகர் பகத் பாஸில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர நடிகை ரித்திகா சிங்,  துஷாரா விஜயன் ஆகியோர் மிகவும் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் இசையமைத்துள்ளார். 
 

Manju Warrier

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தமிழக அரசின் உரிய அனுமதி பெற்ற பின்னரே... சிறப்பு காட்சி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சி வெளியிட, 'வேட்டையன்' பட குழு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்த நிலையில், தற்போது  தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி போடப்பட உள்ளது. எனவே நாளை மொத்தம் 5 காட்சிகள் ஒளிபரப்பாகும். தமிழகத்தில் 9-க்கு சிறப்பு காட்சிகள் போடப்பட்டாலும், புதுவை, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 7 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண படுக்கையில் இருந்த தங்கை.! கண்ணீருடன் கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!
 

click me!