ஒரே ஒரு பாட்டுல ஒட்டு மொத்த சினிமா இண்டஸ்ட்ரீயையும் திரும்பி பார்க்க வைத்த நடிகை பற்றி தெரியுமா?

First Published | Oct 9, 2024, 1:07 PM IST

நடிகை மஞ்சு வாரியர், 46 வயதிலும் 'மனசிலாயோ' பாடலில் அசத்தலான நடனத்தால் புகழின் உச்சத்தை அடைந்துள்ளார்.

actress manju warrier says she walking in 50's

திரைத்துறையில் எத்தனையோ படங்களில் நடித்து மாஸ் நடிகையாக பெயர் வாங்கியிருந்தாலும், ஒரு படம் வெளியாவதற்கு முன்பே ஒரே ஒரு பாட்டு மூலமாக ஒட்டு மொத்த சினிமா உலகத்தையும் தன்னை திரும்பி பார்க்க வைத்த ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அவர் தான் மஞ்சு வாரியர். அவர் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு முன்னதாக பட்டிதொட்டியெங்கும் ஹிட் கொடுத்த மனசிலாயோ பாடலை பற்றியும், அந்த பாடலுக்கு மஞ்சு வாரியர் எந்த அளவிற்கு கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்றும் முழுமையாக பார்க்கலாம் வாங்க….

தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவர் நடிகை மஞ்சு வாரியர். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்த மஞ்சு வாரியருக்கு தற்போது 46 வயதாகிறது. வயதைப் பற்றி இங்கு குறிப்பிட ஒரு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி பின்பு விவரிக்கிறேன். மோஹரவம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக முதல் முறையாக தொலைக்காட்சியில் அறிமுகமான மஞ்சு வாரியருக்கு சாக்‌ஷயம் படம் தான் அறிமுகத்தை கொடுத்திருக்கிறது.

actor rajinikanth movie vettaiyan cast remuneration, fahadh faasil, amitabh bachchan,manju warrier

அப்போது அவருக்கு வயது 17. அதன் பிறகு நடிகர் திலீப் உடன் இணைந்து சல்லாபம் என்ற மலையாள படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான மலையாள படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் தன்னுடன் சல்லாபம் படத்தில் நடித்த நடிகர் திலீப் உடன் காதல் வயப்பட்டு 1998 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணம் நீண்ட் நாட்கள் நீடிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு இருவரு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மஞ்சு வாரியருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறாள். 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த மஞ்சு வாரியர் How Old Are You? என்ற மலையாள படம் தான் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறது. 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நடித்து வந்த மஞ்சு வாரியருக்கு 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படம் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறது.

Tap to resize

Vettaiyan heroine Manju Warrier video intro out

இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தேசிய விருது பெற்றுத் தரவில்லை. ஆனால், சிறந்த நடிகைக்கான (ஸ்பெஷல் மென்ஷன்) Behindwoods Gold Medals, JFW Movie Awards, South Indian International Movie Awards ஆகிய விருதுகளை வென்று கொடுத்தது. அதன் புறகு துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் நாளைக்கு திரைக்கு வரும் நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலரில் மஞ்சு வாரியர் தொடபான காட்சிகள் இடம் பெறவில்லை. அவரைத் தவிர அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், கிஷோ, ராவ் ரமேஷ், அபிராமி என்று எல்லோருமே டிரைலரில் தோன்றியிருந்தனர். இதனால், மஞ்சு வாரியர் படத்தில் எப்படி டிராவல் செய்கிறார்? ஒருவேளை ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருக்கிறாரா? பிளாஷ்பேக் காட்சியாக வருகிறதா? என்றெல்லாம் நினைக்க தோன்றிவிட்டது.

actor rajinikanth movie Vettaiyan Manasilaayo song manju warrier​

ஆனால், படம் வெளியாகாத நிலையில் ஒரே ஒரு பாட்டு மூலமாக பட்டிதொட்டியெங்கும் தனது புகழை பரவச் செய்துள்ளார். அந்த பாட்டு தான் மனசிலாயோ. அனிருத் இசையில் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலமாக வைத்து இந்தப் பாடலை உருவாக்கியிருக்கின்றனர். மேலும், யுகேந்திரன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோர் பலர் பாடியிருக்கின்றனர். சூப்பர் சுபு, விஷ்ணு எடவன் இருவரும் இணைந்து இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மனசிலாயோ என்ற பாடலுக்கு மஞ்சு வாரியர் ஆடிய டான்ஸை மிஞ்ச இந்த உலகத்தில் எவரும் இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு 46 வயதிலும் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார். இது எனக்கு டான்ஸ் ஆட தெரியாது என்று சொல்லும் நடிகைகளுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. மேலும், இந்த பாடலுக்கு ரசிகர்கள் ரீல்ஸ் உருவாக்கி தங்களது பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். இந்தப் பாடலுக்காக அவர் எடுத்துக் கொடுத்த மெனக்கெடல் அதிகம். இந்தப் பாட்டிற்காக அவர் பயிற்சி எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Manju Warrier tamil movies asuran, vettaiyan, thunivu, viduthalai 2

இந்தப் பாட்டு வெளியான பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற மஞ்சு வாரியர் எங்கு சென்றாலும் பவுன்சர்ஸ் பாதுகாப்பாக வருகின்றனர். வேட்டையன் புரோமோஷனிலும் கலந்து கொள்கிறார். தற்போது பிஸியான நடிகையாகவே 46 வயதிலும் வைத்துக் கொள்கிறார். இதற்கு எல்லாம் காரணம் வேட்டையன் படத்திலுள்ள மனசிலாயோ என்ற ஒரே ஒரு பாடல் தான்.

வேட்டையன் படம் நாளைக்கு வெளியாகும் படத்தில் படத்தில் அவரது நடிப்புத் திறமையை பார்க்கலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து விடுதலை பார்ட் 2, மிஸ்டர் எக்ஸ் ஆகிய தமிழ் படங்களிலும் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

Latest Videos

click me!