பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசனுக்கு பதிலாக தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் வீட்டின் உள்ளே முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நுழைந்த நிலையில், அடுத்தடுத்து சாச்சனா, தீபக், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சௌந்தர்யா நஞ்சுட்டன், அர்னவ், அக்ஷிதா, போன்ற போட்டியாளர்கள் நுழைந்தனர்.