ஒரே ஒரு ஓட்டில் ஏ.ஆர்.ரகுமானிடம் தேசிய விருதை பறிகொடுத்த இளையராஜா!!

First Published | Oct 9, 2024, 11:36 AM IST

Ilaiyaraaja vs AR Rahman : இசைஞானி இளையராஜாவை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.

AR Rahman, Ilaiyaraaja

சினிமா கலைஞர்களுக்கு அங்கீகாரத்தை கொடுப்பது விருதுகள் தான். அதில் இந்திய அளவில் ஒவ்வொரு திரைபிரபலங்களும் வாங்க விரும்பும் விருது என்றால் அது தேசிய விருது தான். மத்திய அரசு வழங்கும் இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படும். அப்படி மதிப்புமிக்க உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதை ஒருமுறை கூட வாங்காத உச்ச நட்சத்திரங்களும் இங்கு உண்டு.

Ilaiyaraaja

குறிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு இதுவரை ஒரு தேசிய விருது கூட கிடைத்ததில்லை. இதே நிலை தான் இங்குள்ள இசையமைப்பாளர்களுக்கும் உள்ளது. அனிருத், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நூலிழையில் தேசிய விருதுகளை தவறவிட்டுள்ளனர். இதுவரை கோலிவுட்டில் இருந்து அதிக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்கள் என்றால் அது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் தான்.

Latest Videos


AR Rahman vs Ilaiyaraaja

இசைஞானி இளையராஜா இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். அதன்படி கடந்த 1983-ம் ஆண்டு வெளிவந்த சாகர சங்கமம், 1985-ல் ரிலீஸ் ஆன சிந்து பைரவி, 1988-ல் வெளிவந்த ருத்ரவீணா, 2009-ல் ரிலீஸ் ஆன பழசிராஜா, 2016-ல் வந்த தாரை தப்பட்டை ஆகிய 5 படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார் இளையராஜா. ஆனால் இசைஞானி இளையராஜாவை விட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் அதிக தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ரஜினி நடிக்க மறுத்த பாடலை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கிய இளையராஜா - என்ன பாட்டு தெரியுமா?

AR Rahman

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், 1992-ல் வெளிவந்த ரோஜா, 1996-ல் மின்சார கனவு, 2001-ல் லகான், 2002-ல் கன்னத்தில் முத்தமிட்டால், 2017-ல் காற்று வெளியிடை மற்றும் மாம், 2022-ல் பொன்னியின் செல்வன் என மொத்தம் 7 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இதில் ஏ.ஆர்.ரகுமான் வாங்கிய முதல் தேசிய விருதுக்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதையும் இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் படம் ரோஜா, இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். இப்படத்திற்காக ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகின. அதுவரை இளையராஜாவை மட்டுமே நம்பி இருந்த தமிழ் திரையுலகிற்கு புது ரூட்டை போட்டுக் கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான். 

Ilaiyaraaja lose National Award to AR Rahman

ரோஜா படத்துக்காக தேசிய விருது பரிந்துரையில் ஏ.ஆர்.ரகுமான் இடம்பெற்று இருந்த அதே சமயத்தில் இளையராஜா இசையமைத்த மாஸ்டர் பீஸ் படமான தேவர்மகனும் போட்டியில் இருந்தது. இதில் ஜூரிக்கள் வாக்களித்ததில் இரண்டு படங்களுக்கும் தலா 6 வாக்குகள் கிடைத்திருந்ததாம். இறுதியாக வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் நபராக அப்போதைய ஜூரி மெம்பராக இருந்த பாலுமகேந்திரா இருந்தார். அவரின் வாக்குகள் யாருக்கு செல்லுமோ அவரே வெற்றியாளர் என்கிற நிலை இருந்தது. அந்த சமயத்தில் அவர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாக்களித்ததால் தேசிய விருதை ஒரு ஓட்டில் தவறவிட்டார் இளையராஜா. இதை பாலுமகேந்திராவே ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர். ரகுமான் முதல்... மணிரத்னம் வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு 4 தேசிய விருதுகள்!

click me!