நம்புங்கப்பா இது அரண்மனை இல்ல; நயன்தாராவின் போயஸ் கார்டன் வீடு - வைரலாகும் போட்டோஸ்

First Published | Oct 9, 2024, 8:34 AM IST

Nayanthara Photoshoot in Poes Garden House : போயஸ் கார்டனில் புதிதாக கட்டியுள்ள வீட்டில் சிகப்பு நிற பட்டுப் புடவையில் நடிகை நயன்தாரா நடத்திய விதவிதமான போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Nayanthara

போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது தான் நடிகர், நடிகைகளின் கனவாக இருக்கும். அந்த கனவை நனவாக்கியவர்கள் ஒரு சிலரே. போயஸ் கார்டன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடு தான். அவர் வீட்டின் அருகிலேயே நடிகர் தனுஷும் அண்மையில் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார்.

Lady Superstar Nayanthara

இவர்கள் இருவருக்கும் சவால் விடும் வகையில் போயஸ் கார்டனில் அரண்மனை போல ஒரு வீட்டை கட்டி இருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன்னர் வரை அபார்ட்மெண்டில் வசித்து வந்த நயன்தாரா, கடந்த ஆண்டு தான் போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு வாங்கி அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆனார்.

Tap to resize

Nayanthara Photoshoot

நயன்தாரா தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டை அரண்மனை போல அலங்கரித்து கட்டி இருக்கிறார். இந்த வீட்டில் சகல வசதியும் இருக்கிறது. இந்த வீட்டை தன்னுடைய போட்டோஷூட்டுக்காகவும் பயன்படுத்தி வருகிறார் நயன்தாரா.

Nayanthara in Red Saree

இதுவரை வீட்டின் வெளிப்புறத்தில் மட்டும் போட்டோஷூட் நடத்தி வந்த நயன்தாரா, தற்போது வீட்டின் உள்ளேயே விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதுவும் தலை நிறைய மல்லிப்பூ வைத்து, பளீச் என இருக்கும் சிகப்பு நிற பட்டுச்சேலையில் பக்கா தமிழ் பெண்ணாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Thalapathy 69 Pooja Hegde:தளபதி 69 படத்திற்கு டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே-எத்தனை கோடி தெரியுமா?

Nayanthara latest photos

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு என்ன சேலை கட்டினால் அழகாக இருக்கும் என தனுஷ் வர்ணித்து ஒரு டயலாக் பேசி இருப்பார். அந்த டயலாக்கில், ரெட்டுங்க... ரெட் தான் அழகா இருக்கும், சிவப்பு கலர் புடவை, அதுக்கு மேட்சிங்கா ஜாக்கெட்டு, தல நிறையா மல்லிப்பூ வச்சிட்டு நடந்து வந்தா தேவதை மாதிரி இருப்பாங்க’ என சொல்லி இருப்பார்.

Nayanthara Tattoo

தனுஷ் சொன்ன டயலாக்குக்கு ஏற்றபடி, சிவப்பு நிற பட்டுப்புடவையும், அது மேட்சிங்கா பிளவுஸ் அணிந்து, தலை நிறைய மல்லிகைப்பூ உடன் நடிகை நயன்தாரா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Nayanthara latest photos

நடிகை நயன்தாரா அணிந்துள்ள இந்த சேலையை டிசைன் பண்ணியது இயக்குனர் விஷ்ணு வர்தனின் மனைவி அனுவர்தன் தான். அவர் ஒரு ஸ்டைலிஸ்டாக இருக்கிறார். அவர் கைத்தரி ஆடைகளை விற்பனை செய்து வருகிறார். அதை புரமோட் செய்யும் விதமாக நயன்தாரா இந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார்.

Nayanthara poes garden house

தன் வீட்டில் இருக்கும் பழங்கால பொருட்களுக்கு அருகே அமர்ந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்து நயன்தாரா நடத்தி இருக்கும் இந்த போட்டோஷூட்டுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

Nayanthara Photoshoot in Poes Garden House

நடிகை நயன்தாராவை பட்டுப்புடவையில் பார்த்த ரசிகர்கள் அம்மன் போல் ஜொலிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் விரைவில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  சாச்சனா விஷயத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பிக்பாஸ்!!

Latest Videos

click me!