இந்த சூழலில் நேற்று "நாற்காலி.. யார் காலி" என்கின்ற தலைப்பில் பிக் பாஸ் ஒரு வித்தியாசமான டாஸ்கை கொடுத்திருந்தார். இந்த டாஸ்கில் விளையாடிய தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ரவீந்தர் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. அவரால் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், அவருடைய சக போட்டியாளர்கள் அவரை தாங்கிக் கொண்டு தான் நடக்க வைத்தனர். அதன்பிறகு மருத்துவரிடம் சென்று திரும்பிய ரவீந்தர், தற்பொழுது ஓய்வெடுத்து வந்தாலும், அவரால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியுமா? என்கின்ற சந்தேகங்கள் எழுந்திருக்கிறது.
இந்த சூழலில் அதே போட்டியில் பங்கேற்ற விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளர் தீபத்திற்கும் அதேபோல காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது காலில் கட்டுடன் அவரும் பயணித்து வரும் வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் இனி BB வீட்டில் உடல்ரீதியான டாஸ்குகளை பிக் பாஸ் கொஞ்சம் பார்த்து தான் கொடுப்பார் போல.
Ravinder Chandrasekar:15 ஆண்டுகளுக்கு பிறகு ஓடியதால் வந்த பிரச்சனை – நடக்க முடியாமல் அவதிபட காரணமே இது தானாம்!