பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இதுவரை எந்த சீசனிலும் நடக்காத வகையில் முதல் நாளே எலிமினேஷன் நடைபெற்று நடிகை சாச்சனா நமிதாஸ் எலிமினேட் செய்யப்படார்.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து தற்போது 8-வது சீசன் கடந்த வாரம் ஆரவாரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் என சொல்லும் அளவுக்கு 7 சீசன்களாக அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல், இந்த சீசனில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக புது ஹோஸ்டாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி களமிறங்கி இருக்கிறார்.
26
Sachana
என்னதான் இருந்தாலும் கமல் அளவுக்கு வர முடியாது என ஒருபுறம் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க, மறுபுறம் ஸ்பான்சர்கள் எல்லாம் இது சரிப்பட்டு வராது என ஜகா வாங்க, கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் முதல் எபிசோடிலேயே தன் மீதுள்ள விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கிவிட்டார் விஜய் சேதுபதி. மனுஷன் அவ்வளவு எதார்த்தமாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
36
Vijay Sethupathi sachana namidass
ஒரு நிகழ்ச்சி பேமஸ் ஆக வேண்டும் என்றால் மக்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக அதில் பல ட்விஸ்டுகளை கொடுப்பார்கள். அப்படி கொடுத்த ஒரு ட்விஸ்ட் தான் பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத முதல் நாள் எலிமினேஷன். அதெப்படி ஒருவரை 24 மணிநேரத்தில் எலிமினேட் செய்ய முடியும் என ஒருபுறம் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தாலும், பிக்பாஸ் வீட்டில் நடந்த இந்த முதல் நாள் எலிமினேஷன் தான் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்.
பிக்பாஸ் டிஆர்பிக்காக விரித்த வலையில் வசமாக சிக்கிய ஆடு தான் சாச்சனா. பல்வேறு கனவுகளோடு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அவரை முதல் நாளே கண்ணீரோடு வெளியேற்றிவிட்டனர். 21 வயசு பெண்ணான சாச்சனா, முதல் நாளே போட்டியாளர்கள் அளித்த வாக்குகளின் படி வெளியேற்றப்பட்டது Unfair எவிக்ஷனாகவே பார்க்கப்பட்டது. பிக்பாஸ் இப்படி ஸ்டிரிக்ட் ஆன முடிவை எடுத்தாலும் அதில் ஒரு ட்விஸ்டும் ஒளிந்திருக்கிறது.
56
Sachana Eliminated
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான். அதுவும் இந்த முறை ஆட்டம் புதுசு என்பதால், சற்று மாத்தி யோசித்திருக்கிறார் பிக்பாஸ். சாச்சனாவை கண்ணீரோடு வெளியே அனுப்பினாலும், அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சாச்சனாவை வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
66
Sachana Re Entry
நல்லா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக தான் சாச்சனாவின் எவிக்ஷன் அமைந்துள்ளது. இருப்பினும் கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆனார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல் சாச்சனாவும் வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்து அர்ச்சனாவின் ரூட்டை பாலோ பண்ணி டைட்டில் ஜெயித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.