சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170-வது திரைப்படம் வேட்டையன். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
24
vettaiyan Rajinikanth
வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், பாகுபலி வில்லன் ராணா டகுபதி, இறுதிச்சுற்று பட நாயகி ரித்திகா சிங், சார்ப்பட்ட பரம்பரை பட ஹீரோயின் துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
வேட்டையன் திரைப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வழக்கமாக விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதையொட்டி சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பது கடந்த சில ஆண்டுகளாக ஒரு டிரெண்டாக மாறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுச்சேரியில் நடந்துள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று வேட்டையன் ரிலீஸ் அன்று தங்கள் அலுவலர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
44
Office Leave for vettaiyan Release
புதுச்சேரியில் உள்ள வாஸ்கோ என்கிற நிறுவனம் தான் வருகிற அக்டோபர் 10-ந் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதை கொண்டாடும் விதமாக தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் விடுமுறை விடுவதோடு மட்டுமின்றி தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வேட்டையன் பட டிக்கெட்டையும் புக் செய்து கொடுத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு ஆபீஸ் கிடைப்பதெல்லாம் வரம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.