Kannadasan
கவிஞர் கண்ணதாசன் எழுதும் பாடல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக கண்ணதாசனின் பாடல்கள் பெரும்பாலும் அவர் சந்திக்கும் காட்சிகள், மற்றும் அனுபவங்களை கொண்டே எழுத பட்டவை. அதனால் தான் என்னவோ காலம் கடந்து ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாக கண்ணதாசனின் பாடல்கள் உள்ளன.
Poet Kannadasan
கண்ணதாசன் கண்ணீருடன் எழுதிய ஒரு சூப்பர் ஹிட் பாடலை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 1961-ஆம் ஆண்டு, சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'பாசமலர்'. இத படம் தான் தற்போது வரை அண்ணன் - தங்கை உறவிற்கு உதாரணமாக கூறப்படும் படங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கும் நிலையில்... 7 பாடல்கள் ஏற்கனவே கண்ணதாசன் எழுதி கொடுத்து, அதை எம்.எஸ்.வி கம்போஸும் பண்ணிவிட்டார். ஆனால் 8-ஆவது பாடலை மட்டும் பல நாட்கள் எழுதி கொடுக்காமல் எம்.எஸ்.வி-யை டென்ஷன் பண்ணிவிட்டாராம்.
சீரியலில் அண்ணன்; நிஜத்தில் காதலி! விஜய் டிவி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்த வெற்றி வசந்த்!
Kannadasan
இந்த சமயத்தில் கண்ணதாசனின் சொந்த ஊரில் இருந்து போன் வர, அதில் பேசிய நபர்... உங்கள் தங்கைக்கு பாம்பு கடித்து, மிமரண படுக்கையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் உடனே வாருங்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த கண்ணதாசன் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு தங்கையை பார்க்க, கண்ணீருடன் கிளம்பியுள்ளார்.
Savitri
அதாவது பல நாட்களாக, இந்த பாடலுக்கு லிரிக்ஸ் யோசித்து கொண்டிருந்த கண்ணதாசன்... தன்னுடைய தங்கைக்கு பாம்பு கடித்த உடனே, கண்ணீருடன் ஊருக்கும் செல்லும் வழியில் அவர் நினைவில் தோன்றிய வரிகளை, போன் போட்டு அசிஸ்டென்டிடம் கூறி... எழுத வைத்து எம்.எஸ்.வியிடம் கொடுக்க வைத்துள்ளார். அந்த பாடல் தான், இந்த படத்தில் இடம்பெற்ற "மலர்களை போல் தங்கை உறங்குகிறார்" என தொடங்கும் பாடல். இந்த பாடல் கடும் வேதனையோடு கண்ணதாசன் எழுதியதால் என்னவோ... தற்போது சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.