மிரட்டிய ரவீந்தரை எகிறி அடிக்க பாய்ந்த ரஞ்சித் - பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் வெடித்த மோதல்

First Published | Oct 9, 2024, 1:31 PM IST

பிக்பாஸ் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகர் ரஞ்சித்துக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு பஞ்சமிருக்காது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்த நிலையில், கடந்த வாரம் 8-வது சீசன் அதகளமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி உள்ளதால், கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இம்மும் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

Ravinder, Ranjith

இதில் முதல் நாள் முடிவில் சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டதால் 17 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களுக்கு இடையே தான் போட்டியும் நிலவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் சீனியர் போட்டியாளர்கள் என்றால் அது ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சந்திரசேகர் தான். இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டு அவர்கள் இருவரும் அடிதடியில் இறங்கும் அளவுக்கு முட்டிக்கொண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்.. ரவீந்தருக்காக தனி Chair ரெடி பண்ணிய பிக்பாஸ்! அப்படி அந்த மனுஷனோட ஒரிஜினல் வெயிட்டு என்ன?

Tap to resize

Fight Between Ravinder Chandrasekar and Ranjith

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ரஞ்சித்தை பவித்ரா சமாதானம் செய்ய வந்தபோது ஏன் அந்த பொண்ணை மிரட்டுறீங்க என ரவீந்தர் கேள்வி கேட்க, கையை இறக்கு என ரஞ்சித் வார்னிங் கொடுக்கிறார். அப்போது இடையே விலக்கிவிட வந்த அருண் பிரசாத்தை பிடித்து ரஞ்சித் தள்ளிவிட்டதால் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் கைகலப்பை தவிர்க்க ரஞ்சித்தை தனியாக அழைத்து சென்றனர். பின்னர் ரவீந்தர், என்னை அடிச்சிருவியா நீ என எகிறி வருகிறார்.

Ravinder Chandrasekar vs Ranjith

இதனால் டென்ஷன் ஆன ரஞ்சித், இது பிக்பாஸ் நீ ஒன்னும் இங்க பாஸ் கிடையாது என சொன்னதும், ஏய் என்ன பண்ணிருவ நீ என ரவீந்தர் சவுண்டு கொடுக்க, ரஞ்சித் கோபத்தில் ரவீந்தரை அடிக்க பாய்கிறார். அப்போது சக போட்டியாளர்கள் அவரை தடுக்க முயலும்படியான காட்டிகளுடன் பிக்பாஸ் புரோமோ வெளியாகி உள்ளது. இதன்மூலம் இன்றைய எபிசோடில் செம சண்டை இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதில் யார் மீது தவறு என்பது எபிசோடு பார்க்கும் போது தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்.. சாச்சனா விஷயத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பிக்பாஸ்!!

Latest Videos

click me!