தமிழகத்தை சேர்ந்த ராகவா லாரன்ஸ் ஸ்பீட் டான்சர் என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். இவரது நடன திறமை வெகுவாக பாராட்டப்பட்டது. பின்னர் தமிழில் உன்னை கொடு என்னை தருவேன் பார்த்தேன்,ரசித்தேன், பார்த்தாலே பரவசம், அற்புதம் உள்ளிட்ட படங்களில் செகண்ட் ஹிரோ, சிறப்பு தோற்றம் என வந்த இவருக்கும் முனி சரியான ஓப்பனிங்கை தந்துள்ளது.
25
raghava lawrence
பேய் படத்தை காமெடியாக சொல்லும் இவரது பாணி பிடித்து போகவே முனியை தொடர்ந்து, கஞ்சனா, கஞ்சனா2, கஞ்சனா3 உள்ளிட்ட படைப்புகள் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் ஹாரர் மூவிகளை தவிர இவர் கொடுத்த மற்ற படங்கள் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று கொடுத்தது.
கஞ்சனா வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் ஆனாது. அக்ஷய் குமார் நடிக்கும் இந்த படத்தையும் ராகவாவே இயக்கினார். லக்சுமி என்னும் பெயருடன் அங்கு வெளியான இந்த படம் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது.
இவர் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். கதிரேசன் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. அதில் ரத்தக்களரிக்கு இடையில் ஒருவனை மிதித்தபடி ராகவா லாரன்ஸ் மாஸ் லுக்கில் இருந்தார்.
தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் நாயகன் சரக்கு பாட்டிலை கையில் வைத்தபடி போதையில் இருக்கிறார். அவருக்கு மேல் டிசம்பர் 2022 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனுடன் நாயகன் கைவசம் அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய திட்டங்கள் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.