தெலுங்கு, தமிழ் என கலக்கி வரும் ராசி கண்ணா தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் எழுதி இயக்கும் இந்த படம் இசை நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும் . சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ் டைட்டில் ரோலில் நாயகியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.