Pandian Stores Kaavya: விஜய் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல்,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
25
Pandian Stores Kaavya
இந்த தொடரை மையமாக கொண்டு, பலரது குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில், இந்த தொடருக்கு விஜய் டெலிவிஷன் விருதும் கிடைத்தது குறிப்பிடக்கத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் விஜே சித்ரா, முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். அவருடைய மறைவிற்கு பிறகு முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.
தற்போது காவ்யாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு செல்கிறார். ஆம், விக்னேஷ் சிவனின் உதவியாளரான அருண் இயக்கத்தில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தில் காவ்யா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில், காவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்றைய இளம் நடிகைகள் மாலதீவு, மஜா என்று விதவிதமான இடங்களில் புகைப்படம் வெளியிட்டு வரும் நிலையில், காவ்யாவோ, ஏழைப் பெண்ணாக மாறி போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்.
55
Pandian Stores Kaavya
அதில் குடிசை வீட்டில் குடும்ப குத்து விளக்காக மாறி, பாவாடை தாவணியில் சித்தாள் வேலை செய்வது போன்றும் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஊர்க்குருவி படத்தில் கட்டிட வேலை செய்யும் பெண்ணாக நடிக்கிறீர்களா என்றும், இல்லை நிஜமாகவே கட்டிட வேலை செய்கிறீர்களா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.