2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்!

Published : Dec 17, 2024, 06:47 PM IST

இந்த ஆண்டு பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். குறிப்பாக கீர்த்தி சுரேஷ், நாக சைதன்யா, சோபிதா, ரகுல் ப்ரீத்தி சிங் என சொல்லிக்கொண்டே போகலாம். சரி இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு, ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.  

PREV
111
2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்!
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா:

கடந்த 2021 ஆம் ஆண்டு, நடிகை சமந்தாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த நாக சைதன்யா பிரபல மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
 

211
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படும் கீர்த்தி சுரேஷ், கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த தன்னுடைய நண்பரும், காதலருமான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் இந்து முறைப்படியும் - கிருஸ்தவ முறைப்படியும் நடந்து முடிந்தது.

இரண்டே வருடத்தில் முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்!

311
ரகுல் பிரீத் சிங் - ஜாக்கி பக்னானி:

தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த போது, பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானியை காதலிக்க துவங்கினார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவாவில் இவர்கள் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
 

411
சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி:

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருமே ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், 'சமுத்திரம்' திரைப்படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருவரும் டேட்டிங் செய்து வந்ததோடு, லிவிங்  டூ  கெதர் வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுடைய திருமணம் அதிதி ராவ் குடும்ப வழக்கப்படி அவருடைய பாரம்பரிய கோவிலில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதில் குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மற்றபடி பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கதறும் பெற்றோர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா?

511
வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச் தேவ்:

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய நீண்ட நாள் நண்பரான  நிக்கோலாய் சர்ச் தேவ் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து கரம் பிடித்தார். இவர்களுடைய திருமணம் ஜூலை மாதம் நடந்து முடிந்தது. நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார்.  தற்போது வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
 

611
மேகா ஆகாஷ் - விஷ்ணு:

பிரபல இளம் நடிகியான மேகா ஆகாஷ், தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பல படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷுக்கு எந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. இந்நிலையில் பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசான விஷ்ணு என்கிற நபரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பிரபாஸ்!
 

711
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ஹிட் படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜூன் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.  இவர்களுடைய திருமணம் அர்ஜுன் கட்டியுள்ள, ஸ்ரீ யோகா ஆஞ்சநேயர் கோவிலில் நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டாலும், திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடந்தது.
 

811
மேத்தா ரகுநாத்:

குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மேத்தா ரகுநாத், இந்த ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு ஒரே படத்தில் முழுமையாக திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல; அதற்குள் எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து இத்தனை பேர் விலகலா?

911
பிரேம் ஜி - இந்து திருமணம்:

தன்னுடைய 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த பிரேம்ஜி, இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையாக நடந்த நிலையில், இவருடைய திருமணத்தில், பிரேம்ஜிக்கு நெருங்கிய நண்பர்களான சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை முழுமையாக முன்னிருந்து நடத்தி வைத்தவர் இயக்குனரும் ,நடிகருமான வெங்கட் பிரபு தான்.
 

1011
காளிதாஸ் - தாரிணி:

தமிழில் 'மண் பானையும் மீன் குழம்பும்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, கடைசியாக வெளிவந்த 'ராயன்' திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்திருந்த மலையாள நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தாரணி காளிங்கராயர் என்பவரை டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் .இவருடைய திருமணம் குருவாயூரில் மிகவும் எளிமையான முறையில் நடந்தாலும், திருமண வரவேற்பு சென்னையில் படு பிரமாண்டமாக நடந்தது. ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு காளிதாஸ் - தாரணி ஜோடியை வாழ்த்தினர்.

என் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் நான் அல்ல! கோவில் அவமதிப்பு விவகாரம்; இளையராஜா விளக்கம்!
 

1111
அபர்ணா தாஸ் - தீபக்:

தமிழில் டாடா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபலமானவர் அபர்ணாதாஸ். தளபதி விஜய் உடன் 'பீஸ்ட்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட நடிகர் தீபக் பரம்மோல் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் குருவாயூரில் எளிமையாக நடந்தாலும், திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.
 

click me!

Recommended Stories