Lyricist Vaali
எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘எங்க வீட்டு பிள்ளை. இது ஒரு ரீமேக் படமாகும். தெலுங்கில் என்.டி.ஆர். நடித்த ராம பீமடு என்கிற படத்தை தான் எம்.ஜி.ஆர் ரீமேக் செய்து நடித்திருந்தார். தெலுங்கில் ரமா பீமடு படத்தை இயக்கிய சாணக்யா தான் தமிழிலும் அப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு எம்.ஜி.ஆரின் நடிப்பை தாண்டி கூடுதல் பலம் சேர்த்தது பாடல்கள் தான். இப்படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்து இருந்தனர்.
MGR's Naan Aanaiyittal Song
எங்க வீட்டு பிள்ளை படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததற்கு அதன் வரிகளும் முக்கிய காரணம். அதன்படி இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதி இருந்தார். அதில் ஒன்று குமரிப் பெண்ணின் உள்ளத்திலே என்கிற பாடல் மற்றொன்று நான் ஆணையிட்டால் பாடல். இந்த இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகின. இதில் நான் ஆணையிட்டால் பாடல் குறித்து கவிஞர் வாலி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பழைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒரே பாட்டு; உலக அளவில் கவனம் ஈர்த்த செய்திகளை கோர்த்து வரிகளாக்கிய வாலி!
Lyricist Vaali Songs
நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால் என்கிற பாடலை வாலி எழுத, டி.எம்.எஸ் தனது கம்பீரக் குரலில் பாடி இருந்தார். இப்பாடல் ரெக்கார்டிங்கின் போது, வந்த உடுமலை நாராயண கவி, பாடல் வரிகளை பார்த்துவிட்டு, நான் ஆணையிட்டால் என எழுதியிரிக்க சரி, அப்புறம் ஏன் அது நடந்துவிட்டால்னு எழுதீருக்க, இது அபத்தமா இல்லையா’ அரசன் ஆணையிடும் இடத்தில் இருந்தால் அவர் சொன்னால் நிச்சயம் நடக்கும், பின்னர் ஏன் அது நடந்துவிட்டால் என வருகிறது என கேட்டிருக்கிறார்.
Vaali, MGR
இதற்கு உடனே பதிலளிக்காமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தாராம் வாலி. பின்னர், உடுமலை நாராயணனிடம் உங்க பையன் என்ன செய்கிறான் என கேட்டிருக்கிறார். அதற்கு அவன் எங்க நான் சொல்றதையே கேட்க மாட்டேங்குறான் என சொன்னதும், நீங்க அப்பா தான, நீங்க ஆணையிடும் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆணையிட்டும் உங்கள் மகன் கேட்கவிலையே... அது நடந்துவிட்டால் தான் அதற்கு மதிப்பு என்பதை சுட்டிக்காட்டவே அந்த பாடல் வரிகளை எழுதினேன் என வாலி சொன்னதும் வாயடைத்துப் போனாராம் உடுமலை நாராயணன்.
இதையும் படியுங்கள்... வாலி சரக்கடித்த பின் எழுதிய பாடல்; எவர்கிரீன் ஹிட் அடித்த கதை தெரியுமா?