சன் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் மிஸ்டர் மனைவி சீரியலை, இயக்குனர் ஜவகர் இயக்கி வருகிறார். 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தொடர்ந்து TRP-யில் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வர உள்ளது.
24
Shabhana Quit This Serial
இந்த சீரியல் துவங்கியபோது ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் கதாநாயகியாக நடித்து வந்தார். ஹீரோவாக பவன் ராகவேந்திரா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் லதா, அனுராதா, சபீதா ஆனந்த், ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த சீரியல் பிரைம் டைமில் துவங்கப்பட்ட நிலையில், TRP குறைவாக இருந்த காரணத்தால், வேறு ஒரு நேரத்திற்கு மாற்றப்பட்டது.
எனவே இந்த தொடரில் இருந்து ஹீரோயினாக நடித்து வந்த ஷபானா அதிரடியாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக, வானத்தை போல சீரியலில், சின்னராசுவின் காதலியாக நடித்து வந்த Debjani Modak கமிட் ஆனார். தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
44
Mr Manaivi Serial Going To end
இதை தவிர இன்னும் சில சீரியல்களை முடிவுக்கு கொண்டுவர சன் டிவி தரப்பு முடிவு செய்துள்ள நிலையில், ஆடுகளம், எதிர்நீச்சல் போன்ற புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் மனைவி சீரியல், ஒரு பெண் ஆண்களுக்கு நிகராக ஒரு பிரச்னையை எப்படி அணுகுவார் என்பதை அடிப்படையான கதைக்களத்தில் உருவானது. ஆனால் இப்போது இந்த கதைக்களத்தை விட்டு நகர்ந்து வேறு எதோ கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.