கேரளாவில் தமிழ் சினிமா நடிகர்களுக்கு அதிக மவுசு உள்ளது. அங்கு விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் கேரளாவின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழ் சினிமா நடிகர்கள் இந்த ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம் குறித்து வாயே திறக்காமல் மெளனம் காத்து வருவது சந்தேகத்தை கிளப்பி வருகிறது. கேரளாவில் படம் ஓடினால் மட்டும் போதுமா, அங்குள்ள பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.