கவிஞர் வைரமுத்து, தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட வைரமுத்து இளையராஜா உடன் குறுகிய காலம் பணியாற்றினாலும் அவர் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். சூப்பர்ஹிட் காம்போவாக இருவரும் திகழ்ந்து வந்த நிலையில், திடீரென சண்டை போட்டு பிரிந்தனர். இளையராஜாவை பிரிந்த பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நிறைய ஹிட் பாடல்களை எழுதினார் வைரமுத்து.
24
Vairamuthu
வைரமுத்து 7 முறை தேசிய விருதை வாங்கி இருக்கிறார். முதல் மரியாதை படத்துக்காக தான் அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கிய ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், பாரதிராஜாவின் கருத்தம்மா, சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்கு பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து வென்றிருக்கிறார்.
இத்தகைய சாதனைக் கலைஞனாக வலம் வரும் வைரமுத்து தான் எழுதிய ஒரே பாடல் வரியை 2 பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் நிஜம். வைரமுத்து கடந்த 1999-ம் ஆண்டு அஜித், ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் படத்திற்காக எழுதிய பாடல் வரியை கடந்த 2015-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓ காதல் கண்மணி படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்.
44
OK Kanmani Song
அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் வரும் ‘பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே... என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்’ என்கிற வரியை எழுதிய வைரமுத்து அதே வரியில் பெண்ணே என்பதற்கு பதிலாக கண்ணே என மாற்றி ஏ.ஆ.ரகுமான் இசையமைத்த ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற தீரா உலா பாடலிலும் பயன்படுத்தி இருப்பார். இந்த வரிகள் இடம்பெற்ற அந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.