ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்களை தோலுரித்துக் காட்டி உள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி நடிகைகள் பலர் ஓப்பனாக பேசி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார், மலையாள படத்தில் நடிக்க கேரளா சென்றபோது நடந்த ஒரு ஷாக்கிங் சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.
24
Radhika
அதில் அவர் கூறியதாவது : ஒருமுறை மலையாள பட ஷூட்டிங்கில் இருக்கும்போது சில ஆண்கள் கும்பலாக அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக நடந்து செல்லும்போது என்ன செய்கிறார்கள் என பார்த்தேன். வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே அங்கிருந்த தமிழ் ஆள் ஒருத்தரை கூப்பிட்டு என்ன செய்கிறார்கள் என கேட்டேன். எல்லா நடிகைகளோட கேரவன்ல துணி மாத்துற வீடியோ வச்சிருக்காங்க. எந்த பேரு சொன்னாலும் அதுல இருக்குனு சொன்னாரு. அதைக்கேட்டவுடன் எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு.
அந்த சம்பவத்துக்கு பின் எனக்கு தெரிஞ்ச எல்லா நடிகைகளிடமும், கேரவன் உள்ள போகும்போது ஜாக்கிரதையா போங்கனு நான் சொன்னேன். கேரவன் இல்லாத காலகட்டத்திலேயே நான் நடிச்சிருக்கேன். அந்த காலத்தில் எல்லாம் மரத்துக்கு பின்னாடி துணி கட்டிலாம் டிரெஸ் மாத்தி இருக்கிறோம். டாய்லட்லாம் அப்போ இருக்காது. இப்போ கேரவன் வந்திருப்பது ஒரு நல்ல விஷயம்னு நினைக்கும்போது, அதுக்குள்ளயே பாதுகாப்பு இல்லைனு சொல்லும்போது ஷாக்கிங்கா இருந்தது.
44
chinmayi tweet
இன்று சில நடிகைகள் சொல்கிறார்கள் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்று, ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியும். எனக்கு இதுபோன்று நடந்திருக்கிறது. பெரிய பெரிய அரசியல்வாதி, அவங்க பேரெல்லாம் நான் சொல்ல விரும்பல. இப்போ அவங்க பேரை சொல்லி அசிங்கப்படுத்தனும்னு எனக்கு நோக்கமில்லை. அவங்கெல்லாம் யார் யார்னு எனக்கு தெரியும் என நடிகை ராதிகா பேசியுள்ளது புயலை கிளப்பி இருக்கிறது. ராதிகா ஏசியாநெட்டுக்கு அளித்த பேட்டி குறித்து பாடகி சின்மயி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இச்சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.