Actor Jai: கோவிலில் எனக்கு நடந்த அவமானம்.! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!

Published : May 21, 2026, 12:28 PM IST

Why Did I Choose Islam? - Actor Jai Explains: கோயிலில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக நடிகர் ஜெய் மனம் திறந்துள்ளார். மசூதியில் கிடைத்த சமத்துவம், அமைதி குறித்தும், 2019 முதல் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

PREV
15
Why Did I Choose Islam? - Actor Jai Explains
கோயிலில் தனக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக நடிகர் ஜெய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2019-ல் இருந்தே இஸ்லாத்தை பின்பற்றி வருவதாகவும், ஆனால் இன்னும் பெயரை மாற்றவில்லை என்றும் அந்தப் பேட்டியில் ஜெய் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
25
தொடர்ந்து ஏற்பட்ட அவமானங்கள்
நான் மாலை போட்டு சபரிமலைக்கு போயிருக்கேன். அப்புறம் இயேசுவுக்காக ஜெபமாலை அணிந்து ஒரு வருஷம் விரதம் இருந்திருக்கேன். ஆனா, கோயிலில் எனக்குத் தொடர்ந்து அவமானம்தான் கிடைத்தது. இது எனக்கு ரொம்ப வலியைத் தந்தது. அப்படி ஒருநாள் மசூதிக்கு போனப்போ என்ன நடந்ததுன்னும் ஜெய் சொல்லியிருக்கார்.
35
யாரும் என்னுடன் பேசவில்லை
மசூதிக்குள் போனதும் எல்லாரும் வரிசையா நமாஸ் செஞ்சாங்க. நான் ஒரு நடிகன்னு அங்கிருந்த எல்லாருக்கும் தெரியும். ஆனா, நமாஸ் செய்யும்போது யாரும் என்கிட்ட பேசல. வெளியே வரும்போது சிலர் என்கிட்ட அன்பா பேசினாங்களே தவிர, போட்டோ கேட்கல. அப்போதான் மசூதியில எல்லாரும் சமம்னு எனக்குத் தோணுச்சு.
45
தள்ளுமுள்ளு இல்லாத அமைதி
மசூதிக்குள் போயிட்டா, அங்க அல்லாஹ்தான் பெரியவர். ஒருத்தர் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எல்லாரையும் சமமாதான் நடத்துவாங்க. தொழுகையின்போது தள்ளுமுள்ளு இருக்காது. யாரையும் வெளியே போகச் சொல்ல மாட்டாங்க. எவ்வளவு நேரம் வேணும்னாலும் உட்கார்ந்து தொழலாம்னு ஜெய் சொல்லியிருக்கார்.
55
பெயரை மாற்றும் யோசனை

நான் இஸ்லாத்திற்கு மாறியதிலிருந்து என் குணத்தில் பெரிய மாற்றம் வந்திருக்கு. 2019-ல் மதம் மாறினேன். எனக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருக்கு. எந்த சாமியையும் கும்பிடாத பையன் இப்போ பக்தியா இருக்கான்னு வீட்ல எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. மதம் மாறிய பின் பெயரை மாற்றவில்லை. 'அஜீஸ் ஜெய்' என பெயர் மாற்றும் யோசனையில் இருக்கிறேன்னு அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories