Karuppu Day 6 Box Office : 6ம் நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் சிக்ஸர் அடித்த கருப்பு... வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Published : May 21, 2026, 10:37 AM IST

Karuppu Box Office Collection : சூர்யா, திரிஷா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோடியாக நடித்துள்ள கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் சாதனையை படைத்து வருகிறது.

PREV
14
Karuppu Day 6 Box Office

சூர்யாவின் திரைப்பயணத்தில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஒரு மிகப்பெரிய தியேட்டர் ஹிட் தற்போது கருப்பு திரைப்படத்தின் மூலம் நனவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவரது படங்கள் விமர்சன ரீதியாக கவனம் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவிலான வெற்றியை எட்டவில்லை. ஆனால் இந்த முறை நிலைமையே மாறிவிட்டது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய கருப்பு, தற்போது பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனைகளை பதிவு செய்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?

24
கருப்பு கொண்டாட்டம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். நீதிமன்ற பின்னணி, சமூக கருத்துகள், தெய்வ நம்பிக்கைகள் மற்றும் ரசிகர்களை கவரும் மாஸ் அம்சங்கள் ஆகியவை இணைந்திருப்பது படத்திற்கு தனித்துவமான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. மே 14ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த கருப்பு, கடைசி நேர நிதி பிரச்சனைகளால் ஒரு நாள் தாமதமானது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் உணர்ச்சிமிகு பேச்சும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் மே 15ஆம் தேதி படம் திரைக்கு வந்த பிறகு அந்த ஏமாற்றம் முழுவதும் கொண்டாட்டமாக மாறியது.

34
கருப்பு வசூல் வேட்டை

முதல் நாளிலிருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக “கருப்பன்” தோற்றத்தில் சூர்யா தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. பலரும் சமூக வலைதளங்களில் “இது தான் சூர்யாவின் உண்மையான கம்பேக்” என பதிவிட்டு வருகின்றனர். வசூல் தரப்பிலும் கருப்பு தொடர்ந்து கோடிகளை குவித்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் 147 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி ஆறு நாட்களில் உலகளவில் 175 கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 12.67 கோடியும், கர்நாடகாவில் 1.33 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 1.87 கோடியும் வசூலித்திருக்கிறது கருப்பு.

44
200 கோடியை நெருங்கும் கருப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – திரிஷா ஜோடி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அதேபோல் சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் உணர்ச்சி கலந்த மாஸ் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகின்றன. வார நாட்களிலும் படம் நல்ல அளவில் ரசிகர்களை ஈர்த்து வருவதால், விரைவில் 200 கோடி வசூல் கிளப்பில் கருப்பு இணையலாம் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது. ஒரு நாள் தாமதமாக வெளியான படம் இன்று பாக்ஸ் ஆபிஸில் வேகமாக முன்னேறி, சூர்யாவின் தரமான கம்பேக் படமாக மாறி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories