தியேட்டர் ரிலீஸ் படங்கள்
டக்கர்
சித்தார்த் நடித்துள்ள டக்கர் திரைப்படம் ஜூன் 9-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கப்பல் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். டக்கர் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார்.
விமானம்
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விமானம். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தை சிவபிரசாத் யானலா இயக்கி உள்ளார். அனசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படமும் ஜூன் 9-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
பெல்
ஜோக்கர் படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் பெல். இதில் அவருடன் ஸ்ரீதர் மாஸ்டரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெங்கட் புவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ராபர்ட் இசையமைத்து இருக்கிறார். இப்படமும் ஜூன் 9-ந் தேதி திரைகாண உள்ளது.
டிரான்ஸ்பார்மர்ஸ்
டிரான்ஸ்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் என்கிற ஹாலிவுட் திரைப்படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஜூன் 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் 3டி-யில் வெளியாகிறது.