ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தித்தை சுற்றிப்பார்த்து மெர்சலான ரஜினிகாந்த்

Published : Jun 08, 2023, 11:23 AM IST

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் எம்.சரவணன், எம்.எஸ்.குஹன் ஆகியோருடன் அதனை சுற்றிப்பார்த்தார்.

PREV
14
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தித்தை சுற்றிப்பார்த்து மெர்சலான ரஜினிகாந்த்

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்துள்ள ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை’ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். அப்போது ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசனும் உடன் இருந்தார்.

24

இதுதவிர திமுக எம்பி டிஆர் பாலு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இயக்குநர் எஸ்பி முத்துராமன், மூத்த நடிகர் சிவக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் முரட்டுக் காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் தமிழ் படங்களின் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் ஆடியோ, வீடியோ கருவிகள் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... டபுள் ட்ரீட் கன்பார்ம்! விஜய் பிறந்தநாளன்று சர்ப்ரைஸாக வரவுள்ள லியோ & தளபதி 68 அப்டேட்ஸ் என்னென்ன? முழு விவரம்

34

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளிவந்த பாயும் புலி என்கிற தமிழ்த் திரைப்படத்தில் அவர் சவாரி செய்த சுசுகி RV90 பைக் மற்றூம் சிவாஜி தி பாஸ் திரைப்படத்தில் இடம்பெறும் 'அதிரடி' பாடலில் ரஜினிகாந்த் ஸ்டைலாக எண்ட்ரி கொடுக்கும் சிவப்பு நிற விண்டேஜ் MG TB கார் மற்றும் சிவாஜி சிலை ஆகியவை இந்த அருங்காட்சியத்தின் ஹைலட்டான விஷயமாக பார்க்கப்படுகிறது.

44

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 7-ந் தேதி) அன்று, ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு திடீர் விசிட் அடித்தார். அப்போது அவரை வரவேற்ற தயாரிப்பாளர் எம்.சரவணன் மற்றும் எம்.எஸ்.குஹன் ஆகியோர், அவருக்கு அருங்காட்சியகத்தை சுற்றிக் காண்பித்தனர். சுற்றிப்பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த், அங்குள்ள பொருட்களைப் பார்த்து தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ள துருவ நட்சத்திரம் டிரைலர்! அதுவும் இந்த தேதியிலா? சூப்பர் அப்டேட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories