Aadhi and Nikki Wedding : திருமண பந்தத்தில் இணைந்த ஆதி - நிக்கி கல்ராணி! நட்சத்திர தம்பதிகளின் போட்டோஸ்

Kanmani P   | Asianet News
Published : May 19, 2022, 03:02 PM IST

 Aadhi and Nikki Wedding : நட்சத்திர தம்பதிகளாக மாறியுள்ள நடிகர் ஆதி, க்யூட் நாயகி நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

PREV
16
Aadhi and Nikki Wedding : திருமண பந்தத்தில் இணைந்த ஆதி - நிக்கி கல்ராணி! நட்சத்திர தம்பதிகளின் போட்டோஸ்
Aadhi Nikki marriage

தமிழில் ஜார்மிங் நாயகிகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து கலகலப்பு 2, ஹரஹர மகாதேவகி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

26
Aadhi Nikki marriage

நிக்கி கல்ராணியின் காதலர் ஆதி தமிழில் மிருகம், அய்யனார், அரவாண் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.. மேலும் வில்லனாகும் கலக்கி வரும் இவர் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆதி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

36
Aadhi Nikki marriage

மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் ஒன்றாக நடித்த ஆதியுடனுன் நிக்கி கல்ராணிக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இவர்களுக்கு அண்மையில் தங்கள் காதலை பதிவு செய்யும் விதமாக ஒன்றாக விமான நிலையம் வந்தனர். இதையடுத்து கொஞ்ச நாளிலேயே இவர்களது.திருமணம் நிச்சயமானது. 
 

46
Aadhi Nikki marriage

இவர்களது திருமண நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின. 

56
Aadhi Nikki marriage

இதையடுத்து நேற்று ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண மெகந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில்  நானி, ஆர்யா - சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெறும் ஆலுமா டோலுமா பாடலுக்கு இவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலானது.

66
Aadhi Nikki marriage

இதையடுத்து ஆதி - நிக்கி கல்ராணியின் திருமணம் முறைபடி நடந்தேறியுள்ளது. இதையடுத்து அவர்களது திருமண வரவேற்பும் நடைபெற்றுள்ளது. திரைபிரபலங்கள் மற்றும் அவ்விருவரின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழா குறித்தான கலர்புல் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. ரசிகர்கள் இவர்களது திருமண பந்தம் ஜொலிக்க வாழ்த்து கூறி வருகின்றனர்.

click me!

Recommended Stories