Lakshmi Menon
லட்சுமி மேனன் மலையாளத் திரைப்படமான ரகுவின்டே ஸ்வாந்தம் ரசியா என்னும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் கடந்த 2011 -ம் ஆண்டு அறிமுகமானார். பின்னர் 2012 இல் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கியில் கதாநாயகியாக நடித்தார். இதுவே லட்சுமி மேனனின் முதல் தமிழ் படமாகும்.
Lakshmi Menon
இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் உள்ளிட்ட கிராமத்து பின்னணி கொண்ட தமிழ் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றன, இந்த தொடர் வெற்றி லட்சுமி மேனனை முன்னணி நட்ஷத்திரமாக மாற்றியது. 2013 இல் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றார். சுந்தரபாண்டியன் மற்றும் கும்கியில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார் .
Lakshmi Menon
சுசீந்திரனின் ஆக்ஷன் திரைப்படமான பாண்டியநாடு-வில் விஷாலுடன் இணைந்து நடித்த இவர் நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். விமலுடன் மாஞ்சா பை மற்றும் சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, கார்த்தியுடன் கொம்பன் உள்ளிட்ட படங்கள் திரையில் வெற்றி பெற்றது.
Lakshmi Menon
நாயகியாக வெற்றி கொடி நாட்டி வந்த இவர வேதாளம் திரைப்படத்தில் அஜீத் குமாருக்கு சகோதரியாக நடித்தார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பாராட்டப்பட்டார். ஆனாலும் வருடத்திற்கு நான்கு படங்களை கொடுத்து வந்த இவரது பட வாய்ப்பு மெல்ல மெல்ல குறைய துவங்கியது.
Lakshmi Menon
ஜெயம் ரவியுடன் மிருதன் , விஜய் சேதுபதியுடன் றெக்க, படத்தை தொடர்ந்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரி என்ட்ரியாக புலிக்குத்தி பாண்டிபடத்தில் நடித்தார். பின்னர் சற்று உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன இவர் தற்போது மீண்டும் உடற்பயிற்சி மூலம் ஓரளவு உடல் எடையை குறைத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் துவங்குவதன் பொருட்டு புது புது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.