ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!

Published : Sep 24, 2024, 06:32 PM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை பாட முடியாமல்... பின்னணி பாடகி சுவர்ணலதா 1 மணி நேரம் அழுத சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.  

PREV
14
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!
AR Rahman

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும், அவர்களில் இருந்து, ரசிகர்களால்  மிகவும் தனித்துவமாக பார்க்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழகத்தில் பிறந்து, இந்திய மண்ணை பெருமை பட வைத்தவர். தென்னிந்திய திரையுலகினரின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை வென்றபோதும், எளிமையின் சிகரமாக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏராளமான இசை கச்சேரிகள் நடத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். 
 

24
AR Rahman Roja Movie Songs

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், வெளியான ரோஜா படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தன்னுடைய முதல் படத்திற்கே தேசிய விருதை வென்று ஆச்சர்யப்படுத்தினார். அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற, சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை, தமிழா தமிழா, ருக்குமணி ருக்குமணி போன்ற அணைத்து பாடல்களுமே ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை. இந்த படத்திற்கு பின்னர் தமிழில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைக்க துவங்கினார்.

பிக்பாஸ் சீசன் 8 துவங்குவது எப்போது? தேதியை உறுதி செய்த விஜய் சேதுபதியின் புதிய புரோமோ!
 

34
Oscar Winner AR Rahman

இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது மட்டும் இன்றி... ஏராளமான பாடல்களை பாடியும் உள்ளார். கடைசியாக தனுஷின் 50-ஆவது படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில்... தற்போது இவரின் கைவசம் மட்டும் சுமார் 15 படங்களுக்கு மிகாமல் உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் இசையில் வெளியான மின்மினி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையின் சிறப்பு என்றால்.. அவரது இசை தனித்துவமாக இருக்கும் என்பதை தான் நம் உணர்வை தொடும் படி இருக்கும். இதனை அவருடைய பாடல்களை அனுபவித்த கேட்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால் சாங் ரெக்கார்டிங் தியேட்டரிலேயே பாடகி சுவர்ணலதாவை இவர் இசையில் பாட முடியாமல் கதறி அழுத சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
 

44
Singer Swarnalatha

ஆம், இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில்... 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'கருத்தம்மா'. இந்த படத்தில், ராஜா ஹீரோவாக நடிக்க, ராஜஸ்ரீ ஹீரோயினாக நடித்திருந்தார். மற்றொரு நாயகியாக மஹேஸ்வரி நடித்திருப்பார். கிராமங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளி பால் கொடுத்து கொள்ளும் வழக்கம் இருந்ததை இந்த படம் தோலுரித்து காட்டியது. இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடல் என்றாலும், சுவர்ணலதா பாடிய 'போறாளே பொண்னு தாயி' பாடல் உயிரோட்டமாக இருக்கும். வைரமுத்து வரிகளில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இந்த பாடலை பாடி கொண்டிருக்கும் போதே... சுவர்ணலதா பாட முடியாமல் ஒரு மணிநேரம் அழுதாராம். இதே உணர்வு இந்த படத்தை திரையரங்கில் பார்த்த பலருக்கும் இருந்தது என்றே கூறலாம். இந்த பாடலுக்காக சுவர்ணலதா, தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கலில் ஜெயம் ரவியின் தோழி கெனிஷா: வெடிக்க இருக்கும் புதிய பிரச்சனை!!
 

Read more Photos on
click me!

Recommended Stories