பிக்பாஸ் சீசன் 8 துவங்குவது எப்போது? தேதியை உறுதி செய்த விஜய் சேதுபதியின் புதிய புரோமோ!

Published : Sep 24, 2024, 04:26 PM ISTUpdated : Sep 24, 2024, 04:37 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சற்று முன் பிக்பாஸ் துவங்கும் தேதி, அதிகார பூர்வமாக ஆறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
பிக்பாஸ் சீசன் 8 துவங்குவது எப்போது? தேதியை உறுதி செய்த விஜய் சேதுபதியின் புதிய புரோமோ!
Bigg Boss Season 8 Tamil

விஜய் டிவியில், டிஆர்பி-யில் மற்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை தற்போது பிக்பாஸ் தரப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை, 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமலஹாசன் தான்.

24
Kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை, ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி தரப்பு, கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தியது.  ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும்  பின்னர் ரசிகர்களுக்கு அந்த நிகழ்ச்சி போர் அடிக்க துவங்கியது. எனவே பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து, கமலஹாசன் விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிகர் சிம்பு தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

34
Bigg Boss tamil

சமீபத்தில், உலக நாயகன் கமலஹாசன்... பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்தும் அதிரடியாக வெளியேற உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். திரைப்பட பணிகள் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக இவர் அறிவித்திருந்தாலும்,  அமெரிக்கா சென்று ஏ ஐ டெக்னாலஜி குறித்து கமலஹாசன் படிக்க உள்ளது தான்... பிக்பாஸை விட்டு விலக முக்கிய காரணம் என கூறப்பட்டது. கமல்ஹாசன் விலகியதால், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என கேள்வி எழுந்த நிலையில், இதில் நயன்தாரா, சூர்யா, சிம்பு, ராதிகா, சரத்குமார், உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர் அடிபட்டது.

44

பின்னர் ஒரு வழியாக நடிகர் விஜய் சேதுபதி தான், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இது குறித்து சற்று முன்னர் விஜய் சேதுபதி தோன்றும் புதிய ப்ரோமோ ஒன்றை பிக்பாஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் அனைவருமே முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது சில பிரபலங்களின் பெயர்கள் யூகங்கள் அடிப்படையில் வெளியாகி வருகிறது. அதே போல் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி 60 லட்சம் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories