Tamil Actors born on Same date : தமிழ் சினிமாவில் ஒரே நாளில் பிறந்த பிரபலங்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் யார், அவர்களின் பிறந்த தேதி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர்கள் கவின் மற்றும் விஜய் இருவருமே ஜூன் 22ந் தேதி பிறந்தவர்கள். இதில் கோலிவுட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் கவின் 1990-ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்திருக்கிறார். அதே போல் தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் தளபதி விஜய் 1974-ம் ஆண்டு ஜூன் 22ந் தேதி பிறந்திருக்கிறார்.
27
Sundar C, Santhanam
நகைச்சுவை நடிகர் சந்தானமும், கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர் சி-யும் ஜனவரி 21-ந் தேதி தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் சந்தானம் 1980-ம் ஆண்டு பிறந்தார். அதேபோல் 100 கோடி வசூல் அள்ளிய அரண்மனை படத்தின் இயக்குனர் சுந்தர் சி 1968-ம் ஆண்டு பிறந்துள்ளார்.
37
venkat Prabhu, Kamalhaasan
உலகநாயகன் கமல்ஹாசனும், கோட் பட இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். இவர்கள் நவம்பர் 7ந் தேதி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதில் தமிழ் சினிமாவின் லெஜண்டாக திகழ்ந்து வரும் நடிகர் கமல்ஹாசன் 1954-ம் ஆண்டு பிறந்தார். அதேபோல் கோலிவுட்டின் கூல் இயக்குனரான வெங்கட் பிரபு 1975-ம் ஆண்டு பிறந்திருக்கிறார்.
47
Maniratnam, Ilaiyaraaja
இசைஞானி இளையராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் டைரக்டர் மணிரத்னம் ஆகிய இருவரும் ஜூன் 2-ந் தேதி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதில் இளையராஜா ஜூன் 3-ந் தேதி பிறந்திருந்தாலும் அன்றைய தினம் கலைஞரின் பிறந்தநாள் என்பதால் அவர்மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் காரணமாக ஜூன் 2ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதில் இளையராஜா 1943-ம் ஆண்டும் மணிரத்னம் 1956-ம் ஆண்டு பிறந்தனர்,
விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கி பின்னர் சினிமாவில் தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறி இன்று டாப் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயேன் பிப்ரவரி 17-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடுவார். அதேநாளில் தான் விஜய் டிவியின் புகழ்பெற்ற தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினியும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் இருவருமே 1985-ம் ஆண்டு பிறந்தவர்கள்.
67
Vikram, Siddharth
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் முதன்மையில் இருப்பவர் விக்ரம், அவரைப்போலவே நடிகர் சித்தார்த்தும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர்கள் இருவருமே ஏப்ரல் 17ந் தேதி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். இதில் விக்ரம் 1966-ல் பிறந்தவர். சித்தார்த் 1979-ல் பிறந்தவர்.
77
Rajini, Cheran
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தும், கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் சேரனும் டிசம்பர் 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். இதில் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். அதேபோல் இயக்குனர் சேரன் 1970-ம் ஆண்டு பிறந்துள்ளார்.