ஆத்தாடி.. 50 நொடி நடிக்க 5 கோடியா! அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா?

First Published | Sep 24, 2024, 3:50 PM IST

பிரபல தென்னிந்திய மொழி நடிகை ஒருவர், 5 நொடி மட்டுமே வரும் விளம்பரப்படத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கி உள்ள தகவல் திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.
 

Actress Nayanthara

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை நயன்தாரா தான் 50 நொடிக்கு 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெருமையை கைப்பற்றியுள்ளார். நயன்தாரா கேரளத்து பைங்கிளி என்றாலும்... இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்று தந்தது தமிழ் திரைப்படங்கள் தான். 
 

Actress Nayanthara Advertisement Salary

பொதுவாக காதல் தோல்வி, மற்றும் திருமணத்திற்கு பின்னர் நடிகைகளுக்கான மார்க்கெட் குறைவது வழக்கம். ஆனால் நயன்தாரா அதிகம் பிரபலமடைந்ததே சிம்பு மற்றும் பிரபு தேவாவுடனான காதல் சர்ச்சைக்கு பின்பு தான். அதே போல் இயக்குனர் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, நான்கே மாதத்தில் சரகேசி மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

'குக் வித் கோமாளி'-யை முடித்த கையோடு 'பிக்பாஸ்' வீட்டிற்குள் செல்லும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
 


Nayanthara Movie Salary

ஒரு பக்கம் திரைப்படங்களிலும், இன்னொரு பக்கம் விளம்பரங்களிலும் படு பிசியாக இருக்கும் நயன்தாரா... பிரபல நிறுவனத்தின் விளம்பர படத்தில், 50 நொடி மட்டுமே நடிக்க 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதக்கணக்கில் கால் சீட் கொடுத்து, நடிக்கும் ஒரு முழு நீள படத்துக்கே நயன்தாரா அதிக பட்சமாக 8 முதல் 10 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெரும் நிலையில்... ஒரு விளம்பரப்படத்திற்கு இந்த அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளது திரையுலகினரை அதிர வைத்துள்ளது.

Nayanthara Raise The salary After Jawan

நயன்தாரா கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக, 'ஜவான்' படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை 5 முதல் 6 கோடி வரை தான் சம்பளம் பெற்றார். ஆனால் பாலிவுட் சென்றபின்னர் இவருக்கு கூடிய மார்க்கெட் தான், தான் நடிக்கும் படங்கள் அனைத்துக்குமே 10 கோடி சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என கறாராக கூறுகிறாராம். அம்மணிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து, தயாரிப்பாளர்கள் வேறு வழி இல்லாமல் சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் தோழி கெனிஷா செய்வது தடை செய்யப்பட்ட ஹீலிங் சிகிச்சை; வெளியாகி இருக்கும் தகவல்கள்!!
 

Actress Nayanthara

நயன்தாராவுக்கு தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்புக்காக தான், டிடிஎச் நிறுவனமான டாடா ஸ்கை... தன்னுடைய விளம்பரப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ரூபாய் 5 கோடி கொடுத்து நடிக்க வைத்ததாம். 50 நொடிகள் மட்டுமே டிவியில் ஓடும் இந்த விளம்பரம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இதுவரை எந்த ஒரு நடிகையும் விளம்பர படத்தில் நடிக்க இந்த அளவுக்கு பெரிய தொகையை வாங்கியது கிடையாது. அதுவும் 50 நொடிக்கு 5 கோடி என்றால் வாய்ப்பே இல்ல பாஸ்.
 

Latest Videos

click me!