கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தன்னுடைய நகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன், தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தன்னுடைய புகாரில், வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதற்க்கு காரணம் தன்னுடைய நகை லாக்கரின் சாவி, இருக்கும் இடம் அவர்களுக்கு தெரியும் என கூறி இருந்தார். அதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்களிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்கிற பெண்ணும், அவருக்கு துணையாக... இருந்த டிரைவர் வெங்கடேசன் என்பவர் செயல்பட்டதும் அம்பலமானது.
சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக்குழு!
இதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார்.. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து, இதுவரை 140 சவரன் நகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு 60 சவரன் நகை காணாமல் போனதாக தெரிவித்த ஐஸ்வர்யா, இதைத் தொடர்ந்து... சமீபத்தில் 200 பவுன் நகை திருடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு புகாரையும் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.
நகை திருட்டு நடந்து, ஒரு மாதம் ஆன பின்னரே இந்த புகாரை அவர் கொடுத்தார். மேலும் இந்த நகை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு துப்பும் துலங்க வில்லை. மேலும் தற்போது, தற்போது விஜய் யேசுதாஸ் வெளிநாடு சென்றுள்ளதால், இது குறித்து புகார் கொடுத்த அவரின் மனைவியிடம் விசாரித்த போது, அவர் பதட்டத்தில் மாறிமாறி பேசிவருவதாக கூறப்படுகிறது. எனவே விஜய் யேசுதான் வெளிநாட்டில் இருந்து வந்ததும், இருவரையும் அமரவைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும்... நகை திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிப்பதற்காக, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தர்ஷனா, தன்னுடைய நகை லாக்கர் சாவி பேட்டர்ன் இல்லை என்றும் என் லாக் கொண்டது என்றும், அதை திறக்க கூடிய எண் தனக்கும் கணவருக்கும் மட்டுமே தெரியும் என கூறியுள்ளார்.
'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!
எனவே இந்த சம்பவத்தை தர்ஷனா கூடவே இருந்து நண்பர்கள் அல்லது உறவினர்கள் செய்தார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை திருட்டு வழக்கில் சிக்கிய டிரைவர் வெங்கடேஷ் பெயரும் அடிபடுகிறது. வெங்கடேஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் டிரைவராக சேருவதற்கு முன்பு, விஜய் யேசுதாஸ் வீட்டில் தான் பணியாற்றியுள்ளார்.