நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!

First Published | Apr 4, 2023, 7:46 PM IST

பிரபல நடிகை பூர்ணா, கர்ப்பமாக இருந்த நிலையில்.. இவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

கேரளாவைச் சேர்ந்த, மலையாள பைங்கிளியான நடிகை பூர்ணா... இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே, தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர், பார்ப்பதற்கு நடிகை அசின் போன்றே இருக்கிறார் என்றும், இவர் அசினின் சகோதரியா? என்று கூட இவர் நடிகையாக அறிமுகமான போது பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார் பூர்ணா. குறிப்பாக தமிழில், இவர் நடிப்பில் வெளியான கொடைக்கானல், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன், போன்ற  பல படங்களில் அடுத்தடுத்து நடித்தாலும், இவரால் முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை பிடிக்க முடியாமல்போனது .

Tap to resize

சமீப காலமாக கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பூர்ணா நடித்த காப்பான், தலைவி, போன்ற படங்களில் நடித்தது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

திரையுலகில் வாய்ப்பு குறைய துவங்கிய பின்னர், துபாயில் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்த ஆண்டு நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு தான், தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் அறிவித்தார்.
 

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா, தன்னுடைய கர்ப்பகாலத்தில் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதே போல் கடந்த மாதம் இவருக்கு நடந்த, வளைகாப்பு புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில் தற்போது நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.  அதன்படி இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாய் - சேய் என இருவருமே நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மருத்துவமனையில் குழந்தையை கையில் ஏந்தியபடி, நடிகை பூர்ணா மருத்துவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!