Surya refuses yaanai :ஹரியை புறக்கணித்த சூர்யா..மச்சானை வைத்து பழிவாங்கும் இயக்குனர்..என்ன விஷயம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 26, 2021, 12:17 PM ISTUpdated : Dec 26, 2021, 12:20 PM IST

Surya refuses yaanai : ஹரி இயக்கி வரும் யானை படத்தில் நடிக்க முதலில் சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

PREV
111
Surya refuses yaanai :ஹரியை புறக்கணித்த சூர்யா..மச்சானை வைத்து பழிவாங்கும் இயக்குனர்..என்ன விஷயம் தெரியுமா?
yaanai movie

yaanai movie : தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யை (Arun Vijay) ஹீரோவாக வைத்து ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி உள்ளார் இயக்குனர் ஹரி.

211
yaanai movie

yaanai movie : கிராமத்து கதையம்சம் கலந்து, ஆக்‌ஷன் படமாக  யானை படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

311
yaanai movie

yaanai movie : யானை (yaanai) படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். 

411
yaanai movie

yaanai movie : ஹரி இயக்கி வரும் யானை படத்தில் நடிக்க முதலில் சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சில காரணங்களால் இருவரும் விலகவே இவர்களுக்கு பதிலாக அருண்விஜய் மற்றும் சமுத்திர கனியை முக்கிய வேடத்தில் நடிக்க ஹரி ஒப்பந்தம் செய்துள்ளார்.

511
singam movie

singam movie :சூர்யாவுக்கு தீர்ப்பு முனையாக அமைந்த ஆறு, வேல், சிங்கம் என அடிக்கான வெற்றி படங்களை தந்தவர் ஹரி. இதில் சிங்கம் படத்தின் 3 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

611
singam movie

singam movie : ஆறு முதல் சிங்கம் வரை சூர்யா பேசும் அடுக்கு வசனங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் ரசிகர்களால்  வெகுவாக விரும்பட்டது. அதோடு இந்த படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி கொடுத்தது.

711
singam movie

singam movie : 2010ம் ஆண்டு வெளியான சிங்கம் இப்படத்தில் சூர்யா, அனுசுகா செட்டி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் அந்நாட்களில் ₹650 மில்லியன் வசூலை பெற்றதால். அதன் அடுத்தடுத்த பாகங்கள் அதிக அதிரடியுடன் வெளியானது.

811
yaanai movie

yaanai movie : கே.வி ஆனந்தின்‘காப்பான்’ திரைப்படம் முடிவடைந்ததும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.  இதற்காக சூர்யாவும் ஹரியும் சந்தித்த புகைப்படமும் வைரலானது.

911
surya movie

surya movie : ஹரி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யா காப்பான் படத்தை தொடர்ந்து சூரரை போற்று, ஜெய் பீம்,  எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகிவிட்டார்.

1011
yaanai movie

yaanai movie : யானை படத்திலிருந்து  சூர்யா விலகியதை அடுத்து வில்லன் ரோலில் நடிப்பார் என சொல்லப்பட்ட பிரகாஷ் ராஜும் பின் வாங்கினார். இதனால் சூர்யாவுக்கு பதில் தனது மனைவியின் அண்ணனான அருண் விஜயையும் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனியையும் ஹரி ஒப்பந்தம் செய்தார்.

1111
surya movie release

surya movie release : பாண்டிராஜ் இலாயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் வரும் பிப்ரவரி 4-ம் தேதி திரைக்காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை சூர்யாவின் படத்திற்கு போட்டியாக திரையிட ஹரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!

Recommended Stories