அட..சூர்யாவின் ஓல்ட் செண்டிமெண்ட்.. வாடிவாசலை பின்னுக்கு தள்ள இது தான் காரணமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 04, 2022, 03:57 PM IST

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து வெற்றி மாறனின் வாடிவாசலில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முன்பாக பாலா படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
18
அட..சூர்யாவின்  ஓல்ட் செண்டிமெண்ட்.. வாடிவாசலை பின்னுக்கு தள்ள இது தான் காரணமா?
suriya

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். 

28
suriya

ஏற்கனவே பாண்டிராஜ் (Pandiraj) இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துள்ளார்.

38
suriya

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் (D Imman) இசையமைத்துள்ளார். தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

48
suriya

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

58
vadivasal

இதற்கிடையே சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை வைத்தே, 'வாடிவாசல்' படம் உருவாகவுள்ளது. கலைப்புலி தாணு தாயாரிக்க உள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். 2020-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி அன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கூட படக்குழு வெளியிட்டது. 

68
vadivasal

பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போன வடிவசால் சூட்டிங் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளிவரவில்லை..தற்போது வரை போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக தெரிகிறது...இந்நிலையில் வடிவாசலுக்கு முன்னர் பாலா படத்தில் நடிக்க சூர்யா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.. 

78
suriya

சூர்யாவின் இந்த திடீர் முடிவிற்கு ஓல்ட் செண்டிமெண்டே காரணம் என சொல்லப்படுகிறது..அதாவது கடந்த 2001 ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான 'நந்தா' சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய டெர்னிங் பாயின்டாக அமைந்த படமாகும்...காதல்பேசும் இளைஞனாக வளம் வந்த சூர்யா ஆக்ஷன் ஹீரோவானது  இந்தப்படத்திற்கு பின்னரே...இதைத்தொடர்ந்து பிதாமகனும் சூர்யாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது..

88
suriya next

பல வெற்றி படங்களை தந்த பாலாவிற்கு சமீபகாலமாக தோல்வி மட்டுமே கிடைத்து வருகிறது..இறுதியாக பாலா இயக்கிய தாரைதப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் சரியாக ஓடவில்லை. விக்ரமின் மகன் த்ருவ்வை வைத்து இயக்கிய வர்மா படமும் குப்பைக்கு போனது அவரை மன உளைச்சலுக்கு தள்ளி விட்டது.இந்நிலையில் தான் தனது முன்னேற்றத்திற்கு வித்திட்ட இயக்குனருக்கு கைகொடுக்க முனைந்த சூர்யா வாடிவாசலுக்கு முன்னர் பாலா படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டாராம்..

Read more Photos on
click me!

Recommended Stories