என்னது 1000 கோடியா? குறைந்தது 2000 கோடி வசூல் - கங்குவா மீது காண்பிடெண்டாக உள்ள ஞானவேல் ராஜா!

First Published Oct 14, 2024, 8:26 PM IST

Kanguva Movie : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் கங்குவா.

Kanguva

தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே கையாலாத ஒரு புதிய கதை களத்தை கையாண்டு. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த திரைப்படத்தை முடித்திருக்கிறார் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா. தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நட்சத்திரமாக பயணித்து வரும் சூர்யா இந்த கங்குவா திரைப்படத்தில் இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக இப்படம் உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் கதையாக இது இருக்கிறது.

குடும்பமும் கானாவும் தான் உயிரு; பிக் பாஸ் வீட்டில் சக்க போடு போடும் கானா ஜெஃப்ரி! யார் இவர்?

Kanguva movie

சுமார் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த கங்குவா திரைப்படத்தில் சுமார் 2 மணி நேரம் அக்கால காட்சிகளும், 25 நிமிடங்கள் தற்போது உள்ள காலகட்டத்தில் நடைபெறும் கதை அம்சமும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சிறுத்தை சிவா கூறியுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் சில வருடங்கள் கழித்து உருவாக போவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதாக இருந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தோடு இணைந்து வெளியிட மனமில்லாமல், மரியாதையை நிமித்தமாக விலகி, கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

Latest Videos


Siruthai Siva

பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சுவாரசியங்களுக்கு எந்த விதமான குறைபாடும் இருக்காது என்றும், படத்தின் இறுதி காப்பியை பார்த்த சூர்யா இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். முதல் முறையாக சூர்யாவோடு அவர் இணைந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் "அண்ணாத்த" திரைப்படமும், ஞானவேல் இயக்கத்தில் சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படம் ஒரே வாரத்தில் வெளியானது. இந்த முறை ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் திரைப்படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதாக இருந்து அதன் பிறகு தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Gananvel Raja

இந்த சூழலில் இப்போதிலிருந்து படக்குழு கங்குவா திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட துவங்கி இருக்கின்றனர். கங்குவா திரைப்படம் திட்டமிட்டபடி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிட்டத்தட்ட 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா தமிழில் மட்டும் டப் செய்ய, அவருடைய குரலை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீதி உள்ள 37 மொழிகளுக்கும் சூர்யாவின் குரலே பயன்படுத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.இ ஞானவேல் ராஜா, ஆயிரம் கோடி என்பதை என்னுடைய இலக்காக நான் வைத்திருக்கவில்லை. கங்குவா திரைப்படம் குறைந்தபட்சம் 2000 கோடியாவது வசூல் செய்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய திரைப்படமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'சூர்யா 45' படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்; வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

click me!