குடும்பமும் கானாவும் தான் உயிரு; பிக் பாஸ் வீட்டில் சக்க போடு போடும் கானா ஜெஃப்ரி! யார் இவர்?

First Published | Oct 14, 2024, 7:02 PM IST

Gana Jeffry : பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட்டான நிலையில் தற்பொழுது 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

BB Jeffry

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் இந்த எட்டாவது சீசனை மாஸாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட வகையில் நடந்து வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஒரு வார காலம் கழித்து அவர் சீக்ரெட் டோர் வழியாக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்தது மிகப்பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் என்றாலே "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்பது தானே என்பது போல பல விஷயங்கள் நடந்து வருகிறது.

'சூர்யா 45' படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்; வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

Gana Jeffry

தொடக்கத்திலே ஆண்கள் ஒன்பது பேர், பெண்கள் 9 பேர் என்று அணி இரண்டாக பிரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வீடும் இரண்டாக பிரிக்கப்பட்டு சுவாரசியமான பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீசனில் பங்கேற்ற 18 போட்டியாளர்களின் நேற்று பிரபல தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இப்பொழுது ஆண்கள் பகுதியில் எட்டு பேரும் பெண்கள் பகுதியில் ஒன்பது பேரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு தெரிந்த முகங்கள் பல இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் இதில் கானா பாடகர் ஜெஃப்ரி குறித்து பலருக்கும் பெரிய அளவில் தெரியாது.

Tap to resize

Bigg Boss Jeffry

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில், கானா ஜெஃப்ரி 9வது போட்டியாளராக நுழைந்தார். ஜெஃப்ரி கானா பாடகராக வெகு சிலருக்கு அறிமுகமானவர். ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது. சென்னையை பூர்வீகமாக கொண்ட அவர் Independent இசை கலைஞராக திகழ்ந்து வருகின்றார். தன்னுடைய மாற்றும் தன்னை சார்ந்துள்ள அன்றாட வாழ்க்கையில் அடங்கியுள்ள போராட்டங்களை பாடல்களாக பாடுகிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கானா பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், தனது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், அவரது தாயை மகிழ்விக்கவும் தான் இந்த நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

Jeffry

கானா ஜெஃப்ரி தனது குடும்பத்தின் ஆதரவாலும், இசை மீதான அவரது ஆர்வத்தாலும் தமிழ் இசைத்துறையில் தனது இடத்தைப் பிடிக்க முயன்று வருகின்றார். அவரது தனித்துவமான கானா பாடும் பாணி மற்றும் குரல், பெரிய ரசிகர் பட்டாளத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. இது தவிர, பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளை கச்சிதமாக ஒருங்கிணைக்கும் அவரது இசைக்காக ஜெஃப்ரி பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார். முழுமையாக தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக, பாடகர் கானா ஜெஃப்ரி இப்போது பிக் பாஸ் தமிழ் 8 வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

இது நம்ம ஆளு; பாக்கியராஜுக்கு நோ சொன்ன இளையராஜா - பாட்டிலேயே மாஸ் ரிப்ளை கொடுத்த வாலி!

Latest Videos

click me!