இது நம்ம ஆளு; பாக்கியராஜுக்கு நோ சொன்ன இளையராஜா - பாட்டிலேயே மாஸ் ரிப்ளை கொடுத்த வாலி!

First Published | Oct 14, 2024, 6:34 PM IST

Vaali Vs Ilayaraja : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் பலருடைய முதல் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இருந்து அவர்களுடைய படத்தை ஹிட் ஆக்கியவர் இளையராஜா.

Bhagyaraj

கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை இயக்கம், எழுத்து, இசை, வசனம் மற்றும் நடிப்பு என்று பன்முகத்திறமையோடு வளம் வந்து கொண்டிருக்கும் வெகு சில கலைஞர்களில் ஒருவர் தான் பாக்யராஜ். கடந்த 1979ம் ஆண்டு வெளியான "சுவர் இல்லாத சித்திரங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் இவர் களம் இறங்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே இயக்குனர் பாரதிராஜாவின் படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் பயணித்து வரும் பாண்டியராஜன், பார்த்திபன் மற்றும் லிவிங்ஸ்டன் போன்ற பலருக்கு ஆசானாக விளங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னதாகவே நாடகங்களிலும் கதை எழுதிய பாக்கியராஜ் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் என்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலாக 1981ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "இன்று போய் நாளை வா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இளையராஜாவோடு இணைந்தார் பாக்கியராஜ்.

இந்த பாடல்களை எல்லாம் எழுதியவர் கங்கை அமரனா! இவ்வளவு தான் தெரியாம போச்சே?

Director Bhagyaraj

தொடர்ச்சியாக பாக்யராஜினுடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களுக்கு இளையராஜா இசை அமைத்து வந்தார். இவர்கள் இருவருடைய காம்பினேஷனில் உருவான பல பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக மாறுகிறது. குறிப்பாக "தாவணி கனவுகள்", "முந்தானை முடிச்சு" மற்றும் "சின்ன வீடு" போன்ற திரைப்படங்களில் உருவான பாடல்கள் இன்றளவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. 

இந்த சூழலில் 1988ம் ஆண்டு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் பாக்கியராஜ் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தான் "இது நம்ம ஆளு" என்கின்ற திரைப்படம். அதுவரை இயக்கம், எழுத்து, நடிப்பு என்று பன்முகத் திறமையோடு விளங்கி வந்த பாக்யராஜ், "இது நம்ம ஆளு" திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக நாம் மாறினால் என்ன என்று சில யோசனைகளை செய்திருக்கிறார். இருப்பினும் நம்மால் முடியவில்லை என்றால் இளையராஜாவிடமே இந்த திரைப்படத்தை ஒப்படைத்து விடலாம் என்கின்ற எண்ணத்தோடு பயணித்து வந்திருக்கிறார்.

Latest Videos


Ithu Namma Aalu

ஒரு கட்டத்தில் நாம் இசையமைக்க வேண்டாம் என்று முடிவு கட்டிய பாக்யராஜ், இளையராஜாவை இது நம்ம ஆளு திரைப்படத்திற்காக அணுகுகிறார். ஆனால் அதற்குள் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க சில பணிகளை பாக்யராஜ் மேற்கொண்டது இளையராஜாவுக்கு தெரிய வர, அவர் கோபித்துக் கொண்டு அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்திருக்கிறார். உடனே பாக்யராஜின் ஈகோவும் மேற்கொண்டு அவரிடம் அந்த படத்திற்கு இசையமைக்க கேட்க தடுத்த நிலையில், அவரே முதல் முறையாக இசையமைப்பாளராக களமிறங்கிய படம் தான் இது நம்ம ஆளு. அது மட்டுமல்ல இந்த படத்தில் ஒலித்த ஒரு பாடலையும் பாடியது பாக்யராஜ் தான்.

Vaali Lyrics

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒலித்த ஆறு பாடல்களில் மூன்று பாடல்களை எழுதியது வாலி தான். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நடித்த பிரபல நடிகை சோபனாவிற்கும் பாக்யராஜிற்கும் இசை போட்டி ஒன்று நடக்கும். இதில் ஷோபனா முறையாக இசைக்கற்ற பெண், அவர் பாடும் பொழுது "சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும் என்று பாடுவார். அதற்கு பாக்யராஜ் பதிலளிப்பது போல "சங்கீதம் பாட கேள்வி ஞானமது போதும்" என்று பதில் சொல்லுவார். இது இளையராஜாவை குறிப்பிட்டு வாலி கிண்டலாக எழுதிய வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்திலும் நான் கிங்கு; தமிழ் பாட்டில் இங்கிலீஷ் வார்த்தைகள் - அசத்திய வாலியின் டாப் 4 பாடல்கள்!

click me!