
இசையமைப்பாளர், பாடகர், என்பதை தாண்டி... கங்கை அமரன் இயக்குனர், பாடலாசிரியர், அரசியல் பிரபலம் என தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தாலும், ஏனோ இவர் தனித்து தெரியாமல் போன பிரபலமாகவே தற்போது வரை உள்ளார்.
குறிப்பாக கங்கை அமரனுக்கு கிடைக்க வேண்டிய பெயர்கள் கூட, வேறு சில பிரபலங்களுக்கு சென்று விடும். அப்படி தான் இவர் இசையில் வெளியாகி பாடல்கள் ஹிட் அடித்தால், அந்த பாடலை இளையராஜா தான் இசையமைத்தார் என சிலர் நினைத்து கொள்வார்கள், அதேபோல் இவர் பாடல்கள் எழுதி அந்த பாடல் ஹிட்டானால், அது வாலியோ அல்லது கண்ணதாசனோ எழுதிய பாடல் என நினைப்பார்கள்.
அப்படி இதுவரை வாலி - கண்ணதாசன் போன்ற பிரபலங்கள் எழுதியதாக நாம் நினைத்த பல பாடல்களை எழுதியவர் கங்கை அமரன் தான். இவர் எழுதிய சில சூப்பர் ஹிட் பாடல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
80-களில் இருந்து இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் எவர் கிரீன் பாடலான... 'என் இனிய பொன் நிலாவே' பாடல் கங்கை அமரன் எழுதியது தான். 1980ல் இளையராஜா இசையில் வெளியான மூடுபனி திரைப்படத்தில் இந்த பாடல் பெற்றிருக்கும். இந்த பாடலை பல படங்களில் ரெஃப்ரென்ஸாக பயன்படுத்தி உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படத்தில், சமீரா ரெட்டியை பார்த்து சூர்யா, தன்னுடைய கிட்டாரை வாசித்து கொண்டே இந்த பாடலை பாடி இருப்பார்.
கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்து கனவை தொலைத்த நடிகை சௌந்தர்யா!
அதேபோல் எஸ்பிபி நடிப்பில் வெளியான கேளடி கண்மணி படத்தில், எஸ்பிபி மூச்சு விடாமல் பாடிய பாடலான 'மண்ணில் இந்த காதலின்றி' பாடல் வரிகளை எழுதியவரும் கங்கை அமரன் தான். இந்தப் பாடல் துவங்குவதற்கு முன், எஸ்பிபி கடலை சாப்பிட்டுவிட்டு அந்த பேப்பரில் இருக்கும் பாடலை தான் பாடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில் பாவலர் வரதராஜன் என்ற பெயரில்தான் பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கும். உண்மையிலேயே அந்த பாவலர் வரதராஜன் என்பவர் இளையராஜாவின் அண்ணன் தான். அவர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அவருடைய பெயரை மட்டும் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார் கங்கை அமரன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சில ஹிட் பாடல்களை எழுதி உள்ளார் கங்கை அமரன். குறிப்பாக ரஜினிகாந்த் மாஸாகவும்... கிளாஸாகவும் நடித்து வெளியான திரைப்படம் தான் ஜானி. இந்த படத்தில் இடம்பெற்ற 'காற்றே உந்தன் கீதம்' என்கிற பாடலை எழுதியவர் கங்கை அமரன். இதே படத்தில் இடம்பெற்ற 'ஆசைய காத்துல தூதுவிட்டு' என துவங்கும் பாடலையும் கங்கை அமரன் தான் எழுதி இருந்தார்.
பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் ராதா அறிமுகமான திரைப்படம் 'அலைகள் ஓய்வதில்லை' இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக ஜானகி பாடி, படத்தில் இடம்பெறாத பாடலான, புத்தம் புது காலை என்கிற பாடலுக்கும் லிரிக்ஸ் எழுதியவர் கங்கை அமரன் தான். பின்னர் மேகா, படத்தில் இந்த பாடலை இளையராஜா பயன்டுத்தி இருந்தார். இந்த வெர்ஷன் வேற லெவல் ஹிட் அடித்தது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெற்ற 'வாடி ஏன் கப்ப கிழங்கு' என்கிற பாடலுக்கும் வரிகள் எழுதிய பெருமை கங்கை அமரனை தான் சேரும். இந்த பாடல் 80-ஸ் காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடலாக இருந்தது. மேலும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'அம்மன் கோவில் கிழக்காலே' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றவை. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே எழுதியவர் கங்கை அமரன் தான்.
எந்த கணவனும் செய்ய தயங்கும் செயல்; மனைவிக்காக தினமும் இரவில் இதை செய்வாரா ராஜமௌலி?
பாரதிராஜா நடிப்பில் 1980-களில் வெளியான திரைப்படம் 'கல்லுக்குள் ஈரம்'. இந்த படத்திற்கு கங்கை அமரன் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக 'சிறு பொன்மணி' என தொடங்கும் பாடலை எழுதி இருப்பர். இந்த பாடலை சுப்ரமணியபுரம் படத்தில் கூட, ரேடியோவில் பிளே ஆகுவது போல் ஒரு காட்சியில் பயன்படுத்தி இருப்பார்கள். இப்படி இதெல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களா? என ரசிகர்கள் ஆச்சரியப்படும் ஏராளமான பாடல்க உள்ளன.
அந்த காலத்தில், மிகவும் கவித்துவமான பாடல்களை கங்கை அமரன்... தன்னுடைய மகன் வெங்கட் பிரபு படத்திற்காக இளமை ததும்பும் சில பாடல்களையும் எழுதி உள்ளார். சென்னை 600028 திரைப்படத்தில், இடம்பெற்ற 'வாழ்க்கையை யோசிங்கடா', சரோஜா படத்தில் இடம்பெற்ற 'கோடான கோடி' கோவாவில் இடம் பெற்ற 'வாலிபம் வா வா', 'இதுவரை இல்லாத உணர்விது', மங்காத்தா படத்தில் இடம்பெற்ற அஜித்தின் இண்ட்ரோ பாடலான விளையாடு மங்காத்தா பாடல் கூட இவர் எழுதியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.