விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். பெண் வேடம் போட்டு தனக்கென தனி ரசிக பட்டாளைத்தை உருவாக்கிய புகழ்தனது காமெடி மூலம் கவனம் ஈர்த்தார்.
ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான். அவர் போடும் கெட்டப்களுக்கும், அவரின் டைம்மிங் காமெடிக்கும் சிரிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். சின்னத்திரையில் பிரபலமான புகழ் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.