கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்து கனவை தொலைத்த நடிகை சௌந்தர்யா!

First Published | Oct 14, 2024, 4:21 PM IST

மண்ணை விட்டு மறைந்தாலும், ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சௌந்தர்யா சினிமாவுக்காக தன்னுடைய கனவையே தொலைத்தவர்.  இவரின் கனவு என்ன? ஏன் அது நிறைவேறாமல் போனது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

Soundarya

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் எவர்கிரீன் நாயகியாக 90-களில் வலம் வந்து... ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல நடிகை சௌந்தர்யா. தமிழில், மிக குறைவான படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும் அதில் பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாக உள்ளன.
 

Soundarya Lost Her Dream

குறிப்பாகதமிழில் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக, இவர் நடித்த பொன்னுமணி முதல்,  ரஜினிகாந்துக்கு ஜோடியாக அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்துக்கு ஜோடியாக தவசி, சொக்க தங்கம், போன்ற படங்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படங்களாக உள்ளது. திரையுலகில் அறிமுகமான இரண்டே வருடத்தில், முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்த சௌந்தர்யா... 12 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடித்தார்.

எந்த கணவனும் செய்ய தயங்கும் செயல்; மனைவிக்காக தினமும் இரவில் இதை செய்வாரா ராஜமௌலி?
 

Tap to resize

Soundarya Cinema Carrier

சௌந்தர்யா சினிமாவில் அறிமுகமானதும் ஒரு சுவாரஸ்யமான கதை தான். இவரின் தந்தை கே.எஸ். சத்யநாராயண ஐயர், பல வருடங்களாக சினிமாவில் இருந்தவர். இதனால் சௌந்தர்யாவுக்கு சினிமா துறை பற்றி சிறு வயதில் இருந்தே நல்ல புரிதல் இருந்தது. 

இதை தொடர்ந்து 1992-ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான 'கந்தர்வா' . படத்தில் சௌந்தர்யா அறிமுகமான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது. சௌந்தர்யா தன்னுடைய  முதல் படத்தில் நடிக்கும் போது கட்டாயத்தின் பேரில் நடித்தாலும், பின்னர் தொடர்ந்து நடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.

Soundarya interesting Facts

அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த வரவேற்பும் ஒன்று. நடிக்க வந்து விட்டதால், சௌந்தர்யா தன்னுடைய கனவையே தொலைக்க வேண்டி இருந்தது. அதாவது சிறு வயதில் இருந்தே ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தான் சொந்தர்யாவின் ஆசையாகவும், கனவாகவும் இருந்தது. ஆனால் சினிமாவில் கிடைத்த வரவேற்பு இவரது கனவை நிராசையாக மாற்றி விட்டது.

ஒரே வாரம் தான்! வெயிட்டான தொகையுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரவீந்தர்; எவ்வளவு தெரியுமா?
 

Soundarya Death

சௌந்தர்யா கன்னடத்தைச் சேர்ந்த நடிகையாக இருந்தாலும், தெலுங்கு மொழிகளில் தான் அதிக பட்ச படங்களில் நடித்தார். பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட எந்த ஒரு மொழி படங்களிலும் தனக்கு ஏற்ற உடைகளை மட்டுமே அணைந்து நடித்தவர்.

ரகு என்பவரை 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா... அரசியல் காரணங்களுக்காக தன்னுடைய சகோதாருடன் ஹெலிகாப்டரில் சென்றபோது, ஏற்பட்ட விபத்தால் கடந்த 2004-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் இறக்கும் போது 4 மாத கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Latest Videos

click me!